India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 04364 240100, 9442626792 உள்ளிட்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
தாம்பரம் ரயில் நிலையம் பராமரிப்பு காரணமாக 14.8.24 வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தாம்பரத்திலிருந்து மயிலாடுதுறை வழியாக நாகர்கோவில் வரை செல்லும் அந்தோதயா ரயில் சேவை 14.8.24 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. உழவன், கம்பன், ராமேஸ்வரம், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழக்கம் போல் தாம்பரம் வழியாக எழும்பூர் வரை இயக்கப்படுகிறது.
மாநில அளவில் பாரம்பரிய நெல் சாகுபடிக்கான பயிர் விளைச்சல் போட்டி நடைபெற உள்ளது. இதில், “பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது” வழங்கப்பட உள்ளது. எனவே மயிலாடுதுறை மாவட்டத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் 2,00000 கனஅடி உபரி நீர் திறக்கப்படுவதால் திட்டு கிராமங்களான வெள்ளமணல், முதலைமேடுதிட்டு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். கிராம மக்கள் தங்களது உடைமைகளையும், ஆடு, மாடுகளையும் அரசு அறிவித்துள்ள முகாம்களில் தங்க வைக்குமாறு அறிவுறுத்தினார்.
தாம்பரம் ரயில் நிலையம் பராமரிப்பு காரணமாக மயிலாடுதுறை வழியாக செல்லும் ரயில்கள் 14.08.24 வரை மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. அகமதாபாத் ரயில் திருத்தணி மயிலாடுதுறை வழியாக திருச்சி செல்கிறது. அதை போன்று அயோத்தியா லிருந்து வரும் இரயில் விழுப்புரம் மயிலாடுதுறை வழியாக ராமநாதபுரம் செல்லுகிறது. பனாரஸில் இருந்து ராமேஸ்வரம் வரும் இரயில் நெல்லூர் மயிலாடுதுறை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.
மயிலாடுதுறை வட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் பட்டமங்கலம், ஆனைமேலகரம், மறையூர், மூவலூர், சித்தர்காடு ஆகிய கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கி சோழம்பேட்டை கிராமத்தில் நடைபெறவுள்ளது. மு.பு.சு திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெறும் இம்முகாமில், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று தங்களது குறைகளை மனுக்களாக வழங்கி தெரிவிக்கலாம் என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த துணைக் காவல் கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி ஆகியோர் பணி ஓய்வு பெற்றனர். இதனிடையே இருவரையும் நேற்று நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது பைசல் வீட்டில் இன்று அதிகாலை முதல் நண்பகல் 11.30 வரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் அவரிடமிருந்து இரண்டு செல்போன்கள் மற்றும் புதிய விடியல் என்ற இரண்டு புத்தகங்களை கைப்பற்றி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை மாவட்டம், தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் வகுப்பு 4-ன் கீழுள்ள மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனைச் சார்ந்த பணியிடங்களில் பணிபுரியும் 11 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவரலாக பணியாற்றிவந்த ஜெகநாதன் நேற்று, மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமித்து, பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் ஐந்து பள்ளிகளில் பயிலும் 80 மாணவிகளுக்கு சிலம்பம் மற்றும் கராத்தே உள்ளிட்ட பல்வேறு தற்காப்பு கலைகள் இன்று கற்றுத் தரப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.