Mayiladuthurai

News August 3, 2024

மயிலாடுதுறை வழியாக முன்பதிவு இல்லா சிறப்பு ரயில்

image

திருச்சியில் இருந்து மயிலாடுதுறை வழியாக முற்றிலும் முன்பதிவு இல்லாத மெமூ ரயில் சென்னை செல்கிறது. (ஆகஸ்ட்.3) சனிக்கிழமை இரவு 10.30 திருச்சியில் இருந்து புறப்பட்டு மயிலாடுதுறைக்கு இரவு 12.35 வரும் இந்த ரயிலானது தாம்பரத்தை காலை 5:50 மணிக்கு சென்றடையும். சென்னை செல்வோர் இந்த இரயிலை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News August 3, 2024

இலவச ஆம்புலன்ஸ் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்

image

சீர்காழி அருகே விளைந்திடசமுத்திரம் ஊராட்சியில் ஆம்புலன்ஸ் இல்லாத குறையை போக்கும் விதமாக, விளைந்திடசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ரமணி ராஜா தனது சொந்த செலவில் வாங்கப்பட்ட ஆம்புலன்சை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் விளைந்திடசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்த மக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவையானது முற்றிலும் இலவசம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 96556 61700 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News August 3, 2024

திருமாவளவனுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் உத்தரவு ரத்து

image

மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கில் ஆஜராகாத விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் எம்பிக்கு கடந்த மாதம் 31ஆம் தேதி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட அன்றைய தினம் திருமாவளவன் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றதால் வழக்கில் ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்த நிலையில் பிடிவாரண்ட் உத்தரவு நேற்று திரும்பப் பெறப்பட்டது.

News August 3, 2024

மயிலாடுதுறை ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறையில் இருந்து தினசரி மதியம் 12 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல், மதுரை வழியாக செங்கோட்டை செல்லும். இந்த ரயிலானது ஆக. 8ஆம் தேதி ஒரு நாள் மட்டும் வழக்கமான பாதையில் செல்லாமல் திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வழியாக காரைக்குடி , மானாமதுரை ரயில் நிலையங்களில் நின்று விருதுநகர் வழியாக செங்கோட்டை செல்லும் என தெற்கு ரயில்வே இன்று தெரிவித்துள்ளது.

News August 2, 2024

மயிலாடுதுறை வந்த காவிரி தாய்

image

கொள்ளிடம் ஆற்றில் கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீரானது இன்று மாலை வந்தடைந்தது. ஆடி பெருக்கு நாளை கொண்டாடவுள்ள நிலையில், இன்று காவிரி நீரானது தங்கள் பகுதிக்கு வந்ததை அடுத்து, அப்பகுதி மக்கள் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் நின்று காவிரி நீர் செல்வதை மகிழ்ச்சியாக கண்டுகளித்தனர்.

News August 2, 2024

மயிலாடுதுறை மக்களுக்கு இறுதி அழைப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2011க்கு முன் கட்டப்பட்ட அனுமதியற்ற கல்வி நிறுவன வரன்முறை திட்டத்திற்கு விண்ணப்பிக்க 31.01.2025 வரை கால நீட்டிப்பு செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனைபயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். இதுவே இறுதி வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது.

News August 2, 2024

சீர்காழி: பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது

image

திருவெண்காடு காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ ஆக பணியாற்றி வரும் கணேசன் மீது மர்ம நபர் நேற்று பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றார். பலத்த காயமடைந்த கணேசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். திருவெண்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் இன்று பெட்ரோல் குண்டு வீசிய திருவெண்காடு பகுதியைச் சேர்ந்த கலைவேந்தன் என்பவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 2, 2024

சீர்காழி: எஸ்.ஐ வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

image

சீர்காழியை அடுத்த திருவெண்காடு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கணேசன் (58). இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டின் வாசலில் மர்ம நபர் ஒருவர் மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றார். இதில் கணேசனின் கால் மற்றும் முகத்தில் தீக்காயம் ஏற்ப்பட்டது. முன்விரோதம் காரணமாக கணேசன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

News August 2, 2024

மயிலாடுதுறை: குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே குளிக்க அனுமதி

image

காவிரியில் 1,20,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், மயிலாடுதுறையில் நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி துலாக்கட்டத்தில் காவலர்கள் அனுமதிக்கும் இடங்களில் மட்டுமே இறங்கி குளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண் 1077 அல்லது 9442626792 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News August 1, 2024

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தகவல்

image

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் சீர்காழி அருகிலுள்ள வெள்ளமணல் , நாதல்படுகை, காட்டூர், அளக்குடி,  முதலைமேடு கிராமங்கள் வெள்ளநீரால் பாதிக்கப்பட கூடும். எனவே முன்னெச்சரிக்கையாக நீர்வளத்துறை சார்பில் 10000 மணல் மூட்டைகள், 30000 காலிசாக்குகள், 200 சவுக்கைமரங்கள், 10 ஜேசிபி எந்திரங்கள், 5 டிராக்டர்கள், 2 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!