India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 17 மற்றும் 19, 20 ஆகிய மூன்று தினங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான மனுக்களை கொடுக்கவும், உடனடியாக அனைவருக்கும் பணம் கிடைக்கும் என்றும் போலியான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இத்தகைய பொய் செய்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி காலை 6.30 மணி அளவில் “பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” எனும் Beti Bachao Beti Padhao (BBBP) திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் போட்டியில் பள்ளி,கல்லூரி மாணவிகள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள ஆட்சியர இன்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை நகரில் பட்டமங்கல தெருவில் பாதாள சாக்கடை ஆள் நுழைவு தொட்டி திறந்த நிலையில் இருப்பதாக Way2Newsஇல் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது ஆள் நுழைவு தொட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் உடனடியாக சரி செய்யப்பட்டு பாதுகாப்பாக இன்று மூடப்பட்டது.
மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சமையலறையினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டு மாணவர்களுக்கு மதிய உணவு தயார் செய்யப்பட்டு வருவதை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து உணவின் தரம் குறித்து சாப்பிட்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். அதன்படி, இன்று முதல் QR கோடு மூலம் ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் வசதி டிக்கெட் கவுண்டரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பணம் அனுப்பியவுடன் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் நடந்த சுதந்திர தின விழாவில் 500 பயனாளிகளுக்கு ரூ.14 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் மகாபாரதி வழங்கினார். மேலும், அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 441 அரசு அலுவலர்களுக்கும், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 40 காவலர்கள் என மொத்தம் 481 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டது.
கொள்ளிடம் அருகே ஆர்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ் (45). இவர் மயிலாடுதுறையில் மதுவிலக்கு பிரிவில் முதுநிலை காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் காவலர் காளிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று நடைபெற்ற 78ஆவது சுதந்திர தின விழாவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதில் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் ஆக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ ஆர் சந்திரமோகன் சிறப்பாக பணியாற்றி வருவதற்கு ஆட்சியர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காளியப்பன் நல்லூர் ஊராட்சியில் 78ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம கூட்டம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சுதா, எம்எல்ஏ நிவேதா முருகன் அகியார் பங்கேற்று பொதுமக்களின் கோரிக்கைகளை குறித்து கேட்டறிந்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாங்கூர் ஊராட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர் உதவி இயக்குனர் சந்தானம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆனந்தன், வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.