India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இலவச தையல் இயந்திரங்களை இன்று வழங்கினார். அப்போது கூடுதல் ஆட்சியர் மு.ஷபீர் ஆலம் , மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை உட்பட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரடியாக அவர்களது இருப்பிடத்திற்கு சென்று பெற்றுக்கொண்டார். தொடர்ந்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதையடுத்து மயிலாடுதுறையில் சுற்று வட்டாரப்பகுதியில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்த நிலையில் இன்று மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை உடனடியாக கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று(ஜூன் 23) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
தெரிவித்துள்ளார். தருமபுரம் ஆதீனம் விவகாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் அகோரம் கைதாகி சிறை சென்று தற்போது ஜாமீனில் வெளிவந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழ்நாடு முதலமைச்சரால் 20.11.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் பகுதியில் ரயில்களின் விபரம் உள்ளிட்டவற்றை காட்டும் ”டிஜிட்டல் திரை” கடந்த சில மாதங்களாக சரிவர இயங்கவில்லை என பயணிகள் இன்று குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் டிஜிட்டல் திரைக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக அதனை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட முருக மங்கலம் பழவாற்றாங்கரையில் சட்டவிரோதமாக பாண்டி சாராயம் விற்பனையில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்டம் நல்லாதடி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மணிமாறன் ஆகியோரை குத்தாலம் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மு.ஷபீர் ஆலம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சியின் முகமை செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கள்ளச்சாராய விற்பனையை முழுவதுமாக தடுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆட்சியர் மகாபாரதியிடம் இன்று மனு வழங்கப்பட்டது. தொடர்ந்து சங்கத்தின் மாநில செயலாளர் சிங்காரவேலன் மற்றும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து இந்த மனுவினை வழங்கினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் போதை பொருட்கள் வைத்திருப்பது,விற்பனை செய்வது,கடத்துவது உள்ளிட்ட தகவல்களை 9626169492 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகாராக தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தகவல் அளிப்பவர் விவரம் பாதுகாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.