India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே செம்பனார்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் மாபெரும் பொது உறுப்பினர்கள் கூட்டம் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து பொறுப்பாளர்கள் வருகை தர உள்ள நிலையில் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் பங்கேற்கும்படி மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 21 கல்லூரிகளை சேர்ந்த 3240 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். மேலும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த பல்வேறு துறைகள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு, அனைத்து மாணவர்களுக்கும் பயன்பெறும் வகையில் இறுதி நிலை வரை எடுத்து செல்லுதல், கண்காணித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
செம்பனார்கோவில் பகுதியில் மருவார்குழலி உடனாய ஸ்வரணபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், திருக்கல்யாணம் உற்சவம் நேற்று இரவு சிறப்பாக நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்வில் சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று ஆய்வு மேற்கொண்டார். சீர்காழி தியாகராஜர் நகர் பகுதியில் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக உள்ளனவா என ஆய்வு செய்தார். தொடர்ந்து மேலமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார்.
ராமேஸ்வரத்திலிருந்து (வண்டி எண்:22535)புறப்பட்டு மயிலாடுதுறை வழியாக பனாரஸ் செல்லும் இந்த ரயிலானது திருச்சியில் இருந்து 22.8.24 காலை 5.20 மணிக்கு புறப்பட்டு வழக்கமாக மயிலாடுதுறை 7.40மணிக்கு வந்து சேரும் ஆனால் நாளை பனாரஸ் புறப்பட்டு சொல்லும் இந்த இரயில் வழக்கத்திற்கு மாறாக விருத்தாச்சலம் மற்றும் கடலூர் வழியாக செல்கிறது
இந்த ரயில் மயிலாடுதுறை வராது
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாள்தோறும் காலை 10 மணி முதல் 12 மணி வரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு, புகார் மனுக்களை பெற்று துரித நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
சீர்காழி நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஏ பி மகாபாரதி இன்று ஆய்வு மேற்கொண்டார். பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிப்பறை முறையாக பராமரிக்கப்படுகிறதா எனவும் போதிய தண்ணீர் வசதி செய்து தரப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். தொடர்ந்து பேருந்து பயணிகளிடம் கலந்துரையாடினார்.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாள்தோறும் காலை 10 மணி முதல் 12 மணி வரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு புகார் மனுக்களை பெற்று துரித நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புகார் மனுக்கள் மீதான உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி, கடலூர் மார்க்கமாக செல்லும் பனாரஸ் ரயில் நாளை ஆகஸ்ட் 22ஆம் தேதி மயிலாடுதுறை வழியாக செல்லாது என ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சியில் காலை 5.20 மணிக்கு புறப்பட்டு விருதாச்சலம் வழியாக கடலூர் மார்க்கத்தில் இந்த ரயில் செல்லும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் மதியம் 1 மணி வரை, லேசான இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.