India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கர்நாடகா மாநிலம் மைசூரிலிருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற ரயிலில் மதுரை ரயில் நிலையத்திற்கு அசோக் என்ற பெயரில் அட்டை பெட்டிகள் மற்றும் சாக்குமூட்டைகள் வந்துள்ளன. இதில்240 கிலோ குட்கா கடத்திவரப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மதுரை கூடல் புதூர் போலீஸ் எஸ்ஐ கணேசன் ரோந்து சென்றபோது வாளுடன் பதுங்கி இருந் விளாங்குடி சொக்கநாதபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த பழனிக்குமார் (32)என்பவரை கைது செய்து கூடல்புதூர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் யாரையும் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு அவர் மீது ஆயுதங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து செய்து சிறையில் அடைத்தனர்.
மதுரை செல்லூர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்டக் கழகத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் சேலம் சென்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று (ஜன.02) நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து பிரம்மாண்ட வேல் மற்றும் மாலை அணிவித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூர் மற்றும் அரிட்டாபட்டி பகுதியில் பல்வேறு கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜன.10ஆம் தேதி மேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி மேடை அமையும் இடத்தை மாவட்ட செயலாளர் அரச முத்துப்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்றிரவு ஆய்வு செய்தனர்.
மதுரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நகரில் குடிபோதையில் வாகனங்களில் வந்தவர்கள், டூவீலர் ரேசில் ஈடுபட்டோர் உள்ளிட்ட விதி மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது ஒரே இரவில் 325 வழக்குகளை மாநகர் போலீசார் பதிவு செய்தனர். அவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சிலரை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பலாத்கார விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகளை மறைக்க முயலும் திமுகவைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும் பாஜகவின் மகளிரணியினர் மதுரையில் இருந்து நாளை சென்னை வரை நீதிப் பேரணி நடத்த உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். இந்நிலையில், மதுரை மாநகர் காவல் துறை பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளது.
மதுரை மாநகரில் புத்தாண்டை முன்னிட்டு சாலை விதிமுறைகளை மீறியதாக மது போதையில் வாகனம் ஓட்டியதாக சுமார் 356 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பைக் ரைடிங் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலக பலூன் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக மதுரை கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கத்தில் வருகின்ற ஜனவரி 18 மற்றும் 19ஆம் தேதி பலூன் திருவிழா நடத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு திருவிழாவை காண வரும் பொது மக்கள் இந்த நிகழ்வையும் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தின் கீழ் இருக்கக்கூடிய அனைத்து ரயில் நிலையங்களுக்கு வரக்கூடிய பொதுமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். பொதுமக்கள் தங்கள் உறவினர்களை ரயில் நிலையத்திற்கு ரயில் ஏற்றி விட வரும் பொழுது கண்டிப்பாக ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணம் செலுத்தி ரசித்து பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த ரசீது 2 மணி நேரம் செல்லத்தக்கது என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் இன்று (ஜன.01) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.