Madurai

News January 15, 2025

பாலமேட்டில் மஞ்சள் பனியனில் களமிறங்கிய  காளையர்கள்

image

தை திருநாள் 2ம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.அந்தவகையில்,பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்னும் சற்று நேரத்தில் துவங்க இருக்கிறது. இந்நிலையில்,பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான மாடுபிடி வீரர்களின் மருத்துவ பரிசோதனை தற்போது நடைபெற்று வருகிறது.மருத்துவ பரிசோதனை மையத்தில் தகுதி பெற்றவர்களுக்கு மஞ்சள் நிற பனியன் வழங்கப்பட்டுள்ளது.இன்னும் சற்று நேரத்தில் காளையர்கள் களத்தில் இறங்கவுள்ளனர்.

News January 14, 2025

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – 2025 முடிவுகள்

image

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 11 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில்
காயமடைந்தவர்கள் மொத்தம் – 46
மாடுபிடி வீரர்கள் -21, மாட்டின் உரிமையாளர்கள் -17, பார்வையாளர்கள் -6, காவலர் -1, பத்திரிக்கையாளர் -1, உயிரிழப்பு -1.
அதிக எண்ணிக்கையிலான காளைகளை பிடித்த வீரர்கள்
திருப்பரங்குன்றம் கார்த்தி – (301) – 19 காளை
திருப்புவனம் – முரளிதரன் (228)- 16 காளை.
அவனியாபுரம் கார்த்தி (107) – 13 காளைகள் பிடித்தனர்.

News January 14, 2025

காளைகள் வெற்றி பெற்றாலும் செல்லாது – ஆட்சியர் 

image

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கட்டுபாடுளுடன் நடைபெற்று வரும் நிலையில் காளைகள் மீது பவுடர் மற்றும் மஞ்சள்பொடி பூசி வரும் காளைகள் வெற்றிபெற்றாலும் காளைகளுக்கு பரிசுகள் கிடையாது- மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு. பவுடர் பூசியபடி வரும் காளைகள் அடுத்தாண்டில் பங்கேற்க அனுமதியளிக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.

News January 14, 2025

வீரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு 

image

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட வரும் நிலையில் திடீரென்று உள்ளே செல்ல முயன்ற 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கட்டுக்கடங்காமல் உள்ளே வர நுழைந்ததால் காவல்துறையினருக்கும் மாடுபிடி வீரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாடுபிடி வீரர்கள் ஆம்புலன்சுக்கு வழி விடாமல் வழிமறித்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

News January 14, 2025

அவனியாபுரம் கார்த்தி இந்த ஆண்டும் முன்னிலை

image

மதுரை: கடந்த 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த கார்த்தி, இந்த ஆண்டும் முன்னிலை வகித்து வருகிறார்.
தற்போது வரை 4 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், 8 காளைகளை அடக்கி முன்னிலையில் உள்ளார் அவனியாபுரம் கார்த்தி. இறுதிச் சுற்றுக்கும் தேர்வாகியுள்ளார்.

News January 13, 2025

பொங்கல் விடுமுறையில் கேந்திரிய வித்யாலயா தேர்வுகள் இல்லை

image

மதுரை எம்பி வெங்கடேசன் இன்று விடுத்துள்ள அறிக்கையில்; சென்னை, மதுரை, திருச்சி பள்ளிகளில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஜன. 13,16,17,18 தேதியில் 6 முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதை மாற்ற கோரி கேந்திரிய வித்யாலயா மண்டல துணை ஆணையாளர் மணிவண்ணனுக்கு கடிதம் எழுதினேன். தேர்வுகளை தவிர்க்குமாறு பள்ளி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பதில் அனுப்பிய அவருக்கு நன்றி என்றார்.

News January 13, 2025

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு முதல் பரிசாக கார்

image

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறுவதை ஒட்டி ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடு பிடி வீரர்களுக்கு முதல் பரிசாக 8 லட்சம் மதிப்புள்ள நிசான் நிறுவனத்தின் கார் பரிசாக முதல்வர் சார்பாக அளிக்கப்பட உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

News January 13, 2025

அலங்காநல்லூரில் பல்வேறு பணிகள் நடந்துள்ளன – நேரு

image

மதுரை அலங்காநல்லூரில் மூலதன மானியத் திட்டத்தில் 1.49 கோடியில் கட்டப்பட்ட டாக்டர் அம்பேத்கர் பஸ் ஸ்டாண்டை அமைச்சர் இன்று (ஜன.13) நேரு திறந்து வைத்தார். அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் சங்கீதா, எம்எல்ஏ வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் நேரு பேசுகையில், ரூ 20 கோடியே 50 லட்சத்தில் பணிகள் நடந்துள்ளன. சாலைகள், வடிகால்கள், பாலம், குடிநீர் பணிகள் முக்கியமானவை என்றார்.

News January 13, 2025

பாஜக மாநில நிர்வாகி மீது போஸ்கோ வழக்கு பதிவு

image

மதுரையில் முன்னாள் கவுன்சிலர்& பாஜக மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்எஸ்ஷா மீது பதினைந்து வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை தந்ததாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பாஜக நிர்வாகி எம்எஸ்ஷா மற்றும் சிறுமியின் தாய் உள்ளிடோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News January 13, 2025

மதுரையில் எச்.எம்.பி.வி தொற்று பாதிப்பு இல்லை

image

சீனாவில் புதிதாகக் கண்டறியப்பட்ட எச்எம்பிவி தொற்றால் பலர் பாதிக்கப்பட்டனர்.சென்னை, சேலம் ஆகிய இடங்களில் இருவர் இந்தத் தொற்றால். பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.இதுதொடர்பாக ராஜாஜி மருத்துவமனை முதன்மையர் அருள் சுந்தரேஷ்குமார் நேற்று கூறுகையில், ” “தற்போது வரை எச்எம்பிவி தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் யாரும் கண்டறியப்படவில்லை. இந்தத் தொற்றால் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை” என்று கூறினார்.

error: Content is protected !!