Madurai

News January 15, 2025

முதலிடம் பிடித்த வீரருக்கு உதட்டில் காயம்

image

பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்த பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கி முதலிடம் பெற்ற நத்தம் பார்த்திபன் நிசான் கார் பரிசை வென்றார். முதலிடம் பிடித்த பார்த்திபனுக்கு உதட்டில் மாடு முட்டியதில் இரத்த காயம் ஏற்பட்டது. ரத்த காயம் ஏற்பட்ட நிலையிலும் தனது வெற்றியை நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

News January 15, 2025

அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பு போராட்டம் 

image

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் முன்பு 100க்கும் மேற்பட்ட அலங்காநல்லூர் உள்ளூர் மாட்டின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக உள்ளூர் காளைகளுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்து வருவதாக மாட்டின் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு. காளைகளுக்கு அனுமதி கிடைக்கும் வரை வாடிவாசல் முன்பு அமர்ந்து போராடுவதாக அறிவிப்பு.

News January 15, 2025

இரட்டை வழி அணுகுமுறையை கைவிட வேண்டும் – சு.வெ

image

மதுரை – தூத்துக்குடி திட்டம் பற்றி இரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது குறித்து எம்.பி.சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில், அமைச்சரின் அபத்தமான பதிலை கண்டித்து எல்லோரும் சொன்ன கருத்துகள் இரயில்வே நிர்வாகத்தின் காதில் விழ ஏன் 5 நாட்கள் ஆனது? “தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு துரோகமும், தமிழ்நாட்டின் செய்தியாளர்கள் மீது பழியும்” சுமத்தும் இரட்டை வழி அணுகுமுறையை இரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும்.

News January 15, 2025

மதுரை – தூத்துக்குடி அகல இரயில் பாதைத் திட்டம்

image

மதுரை – தூத்துக்குடி அகல இரயில் பாதைத் திட்டம் குறித்து இன்று மத்திய அமைச்சர் தரப்பில் விளக்கம் வெளிவந்த நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், இன்று வெளியிட்ட அறிக்கையில், ” மதுரை – தூத்துக்குடி அகல இரயில் பாதைத் திட்டத்தின் நில எடுப்பில் எந்த சிக்கலும் இல்லை. இத்திட்டத்தை செயல்படுத்திட ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தும்” என்று கூறியுள்ளார்.

News January 15, 2025

பாலமேடு ஜல்லிகட்டில் சிறந்த காளைக்கு முதல்பரிசு டிராக்டர் 

image

மதுரை பாலமேடு ஜல்லிகட்டில் முதல் பரிசு சத்திரப்பட்டி விஜய தங்கப்பாண்டி காளைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக டிராக்டர் பரிசும், இரண்டாம் பரிசு சின்னப்பட்டி கார்த்திக் கன்றுடன் கறவை மாடு பரிசும், மூன்றாம் பரிசு குருவித்துறை பவித்ரன் விவசாய ரோட்டவேட்டர் கருவி பரிசுகளை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.

News January 15, 2025

மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டம்: மத்திய அமைச்சர் விளக்கம்

image

தூத்துக்குடி – மதுரை அகல ரயில் பாதை திட்டத்தை தமிழக அரசு வேண்டாம் என்று சொன்னதாக மத்திய ரயில்வே அமைச்சர் கூறியதாக ஒரு செய்தி பரபரப்பானது. தெற்கு ரயில்வே சார்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், மதுரை தூத்துக்குடி ரயில் வழித்தடம் கைவிடப்படவில்லை. பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு தனுஷ்கோடி ரயில்வே திட்டம் தான் கைவிடப்பட்டதாக அமைச்சர் கூறினார்” என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

News January 15, 2025

ஜல்லிக்கட்டில் பலியானவரின் உடலை வாங்க மறுப்பு

image

அவனியாபுரத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பலியான விளாங்குடியை சேர்ந்த நவீன்குமாரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அதுவரையில் அவரது உடலை பெறப்போவதில்லை என குடும்பத்தினர் கூறி வரும் உறவினர்கள் ஆட்சியர் நேரில் வந்து இழப்பீடு வழங்குவது குறித்து உறுதியளிக்க வலியுறுத்தல்.

News January 15, 2025

பாலமேடு ஜல்லிக்கட்டு – 7 வீரர்கள் தகுதி நீக்கம்

image

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகளும், 900 மாடுபிடி வீரர்கள் களமாட உள்ளனர். முன்னதாக போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனையில் மது அருந்தி வந்தது, ஆவணம் முறையாக இல்லாதது என 7 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

News January 15, 2025

பாலமேடு ஜல்லிக்கட்டு – 7 பேர் தகுதி நீக்கம்!

image

பாலமேடு ஜல்லிக்கட்டில் இதுவரை 7 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மது அருந்தியதாக 3 பேர் மற்றும் போதிய எடை இல்லாதது காரணமாக 3 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கோலாகலமாக தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டில் காளைகள், வீரர்களுக்கு பீரோ, கட்டில் உள்ளிட்டவை பரிசுகளாக வழங்கப்படவுள்ளது.

News January 15, 2025

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது

image

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. முதலில் மகாலிங்கசுவாமி மடத்து காளை அவிழ்த்துவிடப்பட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். பார்வையாளர்களின் ஆரவாரத்தோடு போட்டி தொடங்கியது. இதில் 1000 காளைகள் 900 காளையர்கள் களமிறங்கியுள்ளனர்.

error: Content is protected !!