India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வீரர்களிடம் எந்தவித ஜாதியை பாகுபாடும் கட்டுப்படவில்லை என மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற்று முடிந்த பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழரசன் என்ற மாடுபிடி வீரர் ஜாதி பாகுபாடு காட்டி தன்னை விளையாட அனுமதிக்கவில்லை என்ற உண்மைக்கு புறம்பான தகவலை அளித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடர் இருமல் மற்றும் காய்ச்சலால் உள்நோயாளியாக ஒரு வயது குழந்தை அனுமதிக்கப்பட்டார். குழந்தையின் எக்ஸ்ரே மற்றும் சி.டி. ஸ்கேன் பரிசோதனையில் சிறிய எல்.இ.டி பல்பு மூச்சுக்குழாயில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறப்பு மருத்துவக் குழு மூலம் 2 மணி நேர தீவிர முயற்சிக்குப் பின் வெற்றிகரமாக குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய எல்.இ.டி பல்பு அகற்றப்பட்டது.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபி சித்தர் என்ற மாடுபிடி வீரர் 20 காளைகளை அடக்கி சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு கார் பரிசை வென்றுள்ளார். அபி சித்தர் ஏற்கனவே 2023ம் ஆண்டில் முதலிடமும், 2024ஆம் ஆண்டு 2ம் இடமும் பிடித்தார். தற்போது 2வது முறையாக முதலிடம் பெற்று கார் பரிசை வென்றுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நிறைவு பெற்றிருக்கிறது. காலை 8.20 மணியளவில் தொடங்கிய போட்டி மாலை 6.15 மணிக்கு நிறைவடைந்தது. போட்டியில் 20 மாடுகளை பிடித்து பூவந்தி அபிசித்தர் 20 காளைகளை அடக்கி முதலிடத்தை பிடித்துள்ளார். 14 காளைகளை அடக்கிய பொதும்புவைச் சேர்ந்த ஸ்ரீதர் 2ஆம் இடத்திலும், 9 காளைகளை அடக்கி மடப்புரம் விக்னேஷ் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதுவரை 9 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபி சித்தர் முன்னிலை வகிக்கிறார். மேலமடை தமிழ்ச்செல்வன் 7 காளைகளை அடக்கி 2ம் இடத்திலும், 6 காளைகளை அடக்கிய ஏனாதி அஜய் 3ம் இடத்திலும் தொடர்கிறார். அபி சித்தர் ஏற்கனவே 2023ம் ஆண்டில் முதலிடமும் 2024ம் ஆண்டு 2ம் இடமும் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. காலை முதல் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 19 மாடுபிடி வீரர்கள் 10 பார்வையாளர்கள் உள்ளிட்ட 56 பேர் காளைகள் முட்டியதில் காயம் அடைந்துள்ளனர். இதில் படுகாயமடைந்த 11 பேருக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 5ஆம் சுற்று முடிவடைந்துள்ள நிலையில் அதனை கண்டு களித்த அமெரிக்காவைச் சேர்ந்த ரயன் என்பவர் கூறும் போது, இப்போட்டியை முதன் முதலாக இப்போது தான் பார்க்கிறேன். மிக அற்புதமாக உள்ளது. வீரத்தை இளைஞர்கள் வெளிப்படுத்துவதைப் பார்க்கிறேன். அடுத்தடுத்த ஆண்டிலும் ஜல்லிக்கட்டைக் காண கட்டாயம் தமிழகம் வருவேன் என மகிழ்ச்சியுடன் கூறினார்.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீன்குமாரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளதோடு, ரூ 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என கூறியுள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணி அளவில் தூங்கவுள்ளது.துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.கால்நடை மருத்துவ பரிசோதனை கூட்டத்திற்கு முதல் காளையாக ,மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பட்டி பகுதியைச் சேர்ந்த நாளை வருகை தந்துள்ளது.வாடிவாசலில் இருந்து முதல் காளையாக சீறிப்பாய உள்ளது.முதல் காளையோடு காளை உரிமையாளர்களும் உதவியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்
தைப்பொங்கலை முன்னிட்டு நாளை நடைபெற உள்ள உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். பாலமேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் துணை முதல்வர் வருகையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் போட்டி எந்தவித குழப்பமும் இன்றி நடத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
Sorry, no posts matched your criteria.