India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்கள் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், மதுரை மாவட்ட தேர்தலில் தலைவர்கள் அறிவிப்பில் மிகவும் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று (ஜன.27) பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாவட்ட தலைவராக மாரி சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தி அறிவித்துள்ளார்.
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி: தவறான தகவலை சொல்லி வருகிறார் துரைமுருகன் அதிமுகவை திமுகவுடன் இணைப்பதற்கு எம் ஜி ஆர் முயற்சி செய்தார் என்பது முழு பூசணிக்காவை சோற்றில் மறைப்பதற்கான சம்பவம் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. திமுக நிர்வாகிகள் கலைஞரிடம் கூறி எம்ஜிஆருடன் பேச்சு வார்த்தை நடந்தது தான் தவிர இறுதி கட்டத்தில் இல்லை என்றார்.
மதுரை : தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள அனைத்து கட்சி சாதி மத கொடி கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இன்று ( திங்கட்கிழமை) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
12 வாரங்களுக்குள் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ள நீதிபதிகள், இதுகுறித்து தலைமை செயலாளர் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
இந்திய திருநாட்டின் குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது,இதனடையில் நேற்று சென்னையில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.தேனீர் விருந்து முடிவில் ,செஞ்சிலுவை சங்கம் மூலம் மூலம் சிறந்த பணியாற்றக்கூடிய மதுரையைச் சேர்ந்த ராஜ்குமாருக்கு.ஆளுநர் சிறந்த சமூக சேவருக்கான விருது மற்றும் ரூபாய் இரண்டு லட்சத்திற்கான காசோலையை பரிசாக வழங்கினார்.
அரிட்டாபட்டி கிராம மக்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்ததன் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக அரிட்டாபட்டி சுற்றியுள்ள கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், அந்த வழக்குகள் வாபஸ் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி பகுதியில் கொண்டுவர இருந்த நிலையில் பொதுமக்கள் போராட்டம் மற்றும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டது இந்த நிலையில் மதுரை அரிட்டாபட்டியில் இன்று தமிழக முதல்வருக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது அதற்காக மதுரை வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின்
மதுரை மாநகரில் இன்று (25.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம்.
குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (ஜன.26) மதுரை மாவட்டத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி, கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. ஆகவே, உங்கள் பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்கள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் நடைபெறும் குடியரசு தின விழா மற்றும் கொடியேற்ற நிகழ்வுகளை செய்திகளை வே2நியூஸில் பதிவிடுங்கள். உங்கள் ஊர் செய்திகள் வே2நியூஸ் மூலம் அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள்.
மதுரை : பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மத்திய அரசு நேற்று இரவு பத்ம விருதுகளை அறிவித்து உள்ளது.மதுரை அலங்காநல்லூரை பூர்வீகமாகக் கொண்ட பறை இசைக் கலைஞரான வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழினத்தின் ஆதி இசை வடிவமான பறையிசையை இன்றும் போற்றி வளர்க்கும் முன்னோடிகளுள் ஒருவர் வேலு ஆசான் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை துளசி பவுண்டேஷன் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற மதுரை லூர்துநகரைச் சேர்ந்த சிந்துராஜ், கடந்த 2023ல் மயமானார். இதுகுறித்து விசாரணையில், மறுவாழ்வு மைய உரிமையாளர் ரவீந்திரனுக்கும் சிந்துராஜ் மனைவிக்கு நெருக்கம் ஏற்பட்ட நிலையில், அதனை கண்டித்த சிந்துராஜை ரவீந்திரன் கொலை செய்து தூத்துக்குடி தேரிக்காட்டில் புதைத்து தெரியவந்தது. இச்சம்பவத்தில் ரவீந்திரன், அவரது நண்பர் கண்ணன் ஆகியோர் கைது.
Sorry, no posts matched your criteria.