Madurai

News January 31, 2025

மதுரை மல்லி ரூ.4,200க்கு விற்பனை

image

தை மாத சுபமுகூர்த்த தினங்களையொட்டி, மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூக்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி, நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை தரத்தை பொறுத்து ரூ.3,500 முதல் ரூ.4,200 வரை விற்பனையானது. இதேபோல், பிச்சி ரூ.2,000, முல்லை ரூ.2,000, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.200, கனகாம்பரம் ரூ.2,000க்கு விற்பனையானது. பூ வாங்க இருக்கும் உங்க நண்பர்களுக்கு தெரியபடுத்துங்க.

News January 31, 2025

6 விருதுகளை பெற்ற மதுரை கோட்டம்

image

தெற்கு ரயில்வே சார்பாக 69வது ரயில்வே வார விழா இன்று (ஜன.30) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பாக செயல்பட்ட அலுவலகங்கள் மற்றும் ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. தெற்கு ரயில்வே மண்டல அளவில் சிறப்பாக செயல்பட்ட மதுரை கோட்ட பொறியியல் பிரிவு, போக்குவரத்து பிரிவு, சைகை மற்றும் தொலை தொடர்பு பிரிவு, உள்ளிட்ட 6 சுழற்கேடயங்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News January 31, 2025

அ.வல்லாளபட்டியில் டங்ஸ்டன் ரத்து உத்தரவு கல்வெட்டு திறப்பு

image

அ.வல்லாளபட்டியில் மத்தம் மேலநாட்டார்கள் தலைமையில் 14 தன்னரசு நாட்டு அம்பலகாரர்கள் முன்னிலையில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கும், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இன்று (ஜன.30)மாலை பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது டங்ஸ்டன் ரத்து உத்தரவு கல்வெட்டு திறக்கப்பட்டது. இது வல்லாளபட்டியில் நினைவு சின்னமாக வைக்கப்பட்டது.

News January 31, 2025

முக்கிய வழக்கில் ஆதாரம் வெளியிடும் அண்ணாமலை

image

மதுரை அ.வள்ளாளப்பட்டி நன்றி தெரிவிப்பு விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார். அதில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரத்தில் ஞானசேகரன் யாருடன் பேசினார் என்பது குறித்த தகவல்கள் என்னிடம் உள்ளது. ஆதாரங்களை நான் ஒரு நாள் வெளியிட போகிறேன். வழக்கின் போக்கை தெரிந்து கொண்டு ஆதாரங்களை வெளியிடுவேன். ஞானசேகரன் குற்ற செயல் செய்த பின்னர் யார் யாரிடம் பேசினார் என என்னிடம் ஆதாரம் உள்ளது என்றார்.

News January 30, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

மதுரை மாவட்டத்தில் இன்று (30.01.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 30, 2025

குற்றவாளிகளை கைது செய்ய லஞ்சம் வாங்கிய SI கைது

image

கடந்த 7ம் தேதி கவிதா என்பவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இரு பெண்களை கைது செய்வதற்கு ரூ.30 ஆயிரம் லஞ்சமாக மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலைய எஸ்.ஜ சண்முகநாதன் கவிதாவிடம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் சண்முகநாதனை கைது செய்தனர்.

News January 30, 2025

சமூக சேவகர் உடலை தோண்டி எடுக்க ஐகோர்ட் உத்தரவு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக போராடிய ஜெகபர் அலி, டாரஸ் லாரி ஏற்றி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “உடலை தோண்டி எடுத்து அதை எக்ஸ்ரே எடுக்கவும், வீடியோ பதிவு செய்யவும்” உத்தரவிட்டனர்.

News January 30, 2025

மதுரையிலிருந்து சுற்றுலா ரயில்

image

இந்திய இரயில்வே சவுத் ஸ்டார் இரயில் மூலம் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்தியா முழுவதும் பாரத் கவுரவ் என்ற சுற்றுலா இரயிலை இயக்கி வருகிறது. அந்த வகையில் இந்தியன் இரயில்வே, சவுத் ஸ்டார் இரயில் மற்றும் டூர் டைம்ஸ் இரயில் சேவை சார்பாக மதுரையிலிருந்து காஷ்மீர், ஆக்ரா, டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் பாரத் கெவுரவ் ரயில் மூலம் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது.

News January 30, 2025

அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய முக்கிய உத்தரவு

image

அரசு ஊழியர் பணியின்போது மாற்றுத்திறனாளியான பிறகு அவர் வகித்த பதவிக்கு ஏற்றவராக இல்லாவிட்டால், அதே ஊதிய அளவு மற்றும் சேவை சலுகைகளுடன் வேறு ஏதேனும் பதவிக்கு மாற்றப்பட வேண்டும் என்பது விதியாக உள்ளது.  இந்த உத்தரவு சீருடை பணியாளர்களுக்கும் (காவலர்கள்) பொருந்தும். பணியின்போது நடந்த விபத்தில் சிக்கி பார்வையை இழந்த காவலரை வேலையில் இருந்து விடுவித்ததை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.

News January 30, 2025

மக்களுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் சாலை மறியல்

image

திருமங்கலம் -ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணியால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் சாலையை கடக்க சுரங்கப்பாதை வசதி ஏற்படுத்தி தரக்கோரி ஆலம்பட்டி கிராம மக்கள் இன்று (ஜன.30) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

error: Content is protected !!