India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிராமப்புற தொழில் முனைவோருக்கு தொழில் தொடர்பான சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் சிக்கந்தர் சாவடி வேளாண் உணவு வர்த்தக மையத்தில் பிப். 7 காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பான் கார்டு, டான், உத்யோக சான்றிதழ், உணவு பாதுகாப்புத்துறை சான்றிதழ், ஜி.எஸ்.டி., டிரேட் மார்க், காப்புரிமை தாக்கல், ஆயுஷ் சான்றிதழ் பதிவு, கடன் வசதி சேவைகள் பெறலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
டி.கல்லுப்பட்டியை சேர்ந்த திமுக பிரமுகர் முருகேசன் கடந்த 1-ந்தேதி மங்கம்மாள்பட்டி சுடுகாட்டில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதில் ராஜசேகரன் (33), தர்மதுரை (29), பார்த்திபன் (31), கருப்பசாமி (34), விஜய் (27) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்நிலையில் கொலை நடந்த இடத்திற்கு அவர்களை அழைத்து சென்றபோது தப்பி ஓட முயன்று விஜய், ராஜசேகரன், பார்த்திபன் மூவரும் கீழே விழுந்ததில் கை, கால் முறிவு ஏற்பட்டது.
தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் விரைவில் துவங்க உள்ள நிலையில், மதுரை மாவட்டத்திற்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான கண்காணிப்பு அதிகாரியாக தனியார் பள்ளிகள் இணை இயக்குநர் ஆஞ்சலோ இருதயசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா உறுதி செய்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பிப். 14 வரை மருத்துவ நிலையங்களில் கோழிகளுக்கு கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் 2 லட்சத்து 60 ஆயிரம் கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இணை இயக்குநர் சுப்பையன் தெரிவித்தார்.வெயில் காலம் தொடங்க உள்ள நிலையில் கோழி வளர்ப்போர் முகாம்களில் கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தல்.
மதுரையில் இருந்து தாம்பரத்துக்கு வாரம் இருமுறை அதிவிரைவு ரயில் (எண் 22624) இயக்கப்படுகிறது. இந்த ரயில் 4 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 7 பெட்டிகள், இரு பொதுப் பெட்டிகள் கொண்டு இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பிப். 6 முதல் மாா்ச் 20 வரை கூடுதலாக இரு மூன்றடுக்கு ஏசி வகுப்பு பெட்டிகளும், இரு பொது வகுப்பு பெட்டிகளும் கொண்டு இயக்கப்படவுள்ளன என தெற்கு ரயில்வே செய்தி வெளியிட்டுள்ளது.
மதுரை கரடிகல்லைச் சேர்ந்த அழகு பாண்டி. இவரது மகன் முத்துப்பாண்டி, சேதுபதி, ராஜ பிரபு ஆகியோர் 3 டூவீலர்களில் 70 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த போது 2021ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், தந்தை, மகன் உட்பட 4 பேருக்கும் 10 ஆண்டுகள் சிறை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிஹர குமார் இன்று உத்தரவிட்டார்.
திருப்பரங்குன்றம் கோயில் முன்பாக திரண்ட முருக பக்தர்கள், இந்து அமைப்பினர் 1000-க்கும் மேற்பட்டோர் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என கோஷங்களை எழுப்பி பின்பு பழங்காநத்தம் ரவுண்டானாவை நோக்கி சென்றனர். போராட்டத்தில் பல்வேறு மாவட்டத்திலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கணிசமான அளவில் பெண்கள் பங்கேற்றனர். இதில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, இராம ஸ்ரீனிவாசன் பங்கேற்றனர்.
மதுரையில் எச்.ராஜா பேட்டியளித்தார். அதில், ஒவ்வொரு போராட்டத்திற்கும் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும் கூட அமைச்சர் மூர்த்தி அறிஞர் அண்ணாவிற்கு மாலை அணிவிக்கலாம். ஆனால் என் அப்பன் முருகனுக்கு வழிபாடு நடத்தக் கூடாதா என கேள்வி எழுப்பினார்.மேலும்,ஐகோர்ட் அனுமதி அளித்திருப்பது அரசுக்கு கன்னத்தில் வலுவான அடி கொடுத்திருப்பதாக கூறினார்.
மதுரையில் மீனாட்சி ஆட்சி என்று கூறுவார்கள். அதற்கு ஏற்றார் போல், மாநகராட்சி முதல் பெண் கமிஷனராக சித்ரா விஜயன் பொறுப்பேற்றார். கலெக்டராக சங்கீதா, மேயராக இந்திராணி, ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் மோனிகா ராணா, செயற் பொறியாளர் இந்துமதி, ஆர்டிஓ.,க்களாக ஷாலினி, ஜெயந்தி, தாசில்தார்களாக மீனாட்சி, செந்தாமரை, கல்வி அலுவலர் ரேணுகா, துணை ஆணையர் அனிதா என பெண் அதிகாரிகள் மதுரையை கலக்கி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் பெரும் சர்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பழங்காநத்தம் பகுதியில் இன்று மாலை 5 முதல் 6 மணி வரை அறப் போராட்டம் நடத்து ஐகோர்ட் மதுரை கிளை அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து ஆயிரக்கணக்கான இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த அறப் போராட்டம் நிறைவு பெற்றுள்ளது.
Sorry, no posts matched your criteria.