Madurai

News February 7, 2025

ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

image

தமிழறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவணார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் சாத்தமங்கலம் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரது உருவசிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா இன்று (7-2-2025) மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு). மு.பூமிநாதான் ஆகியோர் உடன் உள்ளனர்.

News February 7, 2025

மதுரை ரேசன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

மதுரை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் நாளை (சனிக்கிழமை) குடிமைப்பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்க, பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, மாற்றம், அங்கீகாரச்சான்று உள்ளிட்ட குறைகளை நிவர்த்தி செய்யலாம். SHARE IT

News February 7, 2025

மேலூர் அருகே கல்லூரி மாணவர் வெட்டி கொலை

image

மேலூர் அருகே உள்ள வீரபத்திரன்பட்டியை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ராஜபாண்டியன் மகன் பாண்டிக் குமரன்(20).
இவர் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்றிரவு 10 மணியளவில், இவருக்கு ஒரு போன் கால் வந்ததையடுத்து வெளியில் தமது காரில் சென்றவர். அழகர்கோவில் சாலையில் சூரக்குண்டு விலக்கு அருகில் சாலையோரமாக பலத்த வெட்டு காயங்களோடு கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 7, 2025

தமிழறிஞர் தேவநேய பாவாணர் பிறந்தநாள்

image

தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் ஜி. தேவநேயப்பன், ஆனமுதன் தேவநேயப்பன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் 7 பிப்ரவரி 1902 ல் பிறந்து 15 ஜனவரி 1981 ல் மறைந்தார். தமிழ் மொழி மற்றும் இலக்கியம் குறித்து 35 க்கும் மேற்பட்ட ஆய்வுத் தொகுதிகளை எழுதிய இந்திய அறிஞர் ஆவார். இவருக்கு மதுரை அண்ணாநகர் பகுதியில் அரசு சார்பில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

News February 7, 2025

மதுரை ரேசன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

மதுரை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் நாளை (சனிக்கிழமை) குடிமைப்பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்க, பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, மாற்றம், அங்கீகாரச்சான்று உள்ளிட்ட குறைகளை நிவர்த்தி செய்யலாம். SHARE IT

News February 7, 2025

வைகை ஆற்றில் கழிவு கலப்பு – 5 ஆட்சியர்களுக்கு உத்தரவு

image

வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வாரந்தோறும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான குழுவினருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. மேலும் வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

News February 7, 2025

மதுரையில் மநீம புதிய நிர்வாகி நியமனம்

image

மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய நிர்வாகிகளை, அதன் தலைவர் கமல்ஹாசன் அறிவித்து வருகிறார். அதன்படி, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய விவசாய அணி மண்டல அமைப்பாளராக, முத்துக்கருப்பன் என்பவரை, கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட முத்துக்கருப்பனுக்கு, மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர்கள் மயில்சாமி, அழகர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

News February 7, 2025

மதுரையில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

image

பிப். 11தைப்பூசம் நாளை முன்னிட்டு பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மதுரை கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்கள் மூலம் பிப். 9முதல் 12 வரை 990 சிறப்பு பஸ்கள் மதுரை, திண்டுக்கல், தேனி, காரைக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை, பொன்னமராவதி, திருச்சியில் இருந்து பழநிக்கும், பழநியில் இருந்து ஊர் திரும்ப ஏதுவாகவும் பஸ்களை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

News February 7, 2025

மதுரையில் இறைச்சி விற்க தடை விதிப்பு

image

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளில் வள்ளலார் தினத்தை முன்னிட்டு வரும் 11-ந் தேதி அனைத்து விதமான இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்களில் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற உள்ளிட்டவற்றின் இறைச்சிகளை விற்பனை செய்யக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.*அசைவ விரும்பிகளுக்கு பகிர்ந்து உஷார் படுத்தவும்

News February 7, 2025

மூளை சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்

image

மதுரை மாநகர காவல் துறையில் பணியாற்றியவர் மோகன் குமார்(31). வீட்டின் அருகே மரம் வெட்டும் போது தவறி விழுந்ததில் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்றிரவு அவர் மூளை சாவடைந்ததை தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர் மனைவி ஒப்புக்கொண்டார். அவரது 2 சிறுநீரகங்கள், இதயம்,கல்லீரல், தோல், கருவிழிகள் தானமாக அளிக்கப்பட்டது.அரசு சார்பில் காவலருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

error: Content is protected !!