India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டத்தில் இன்று (பிப்.09) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை பீபீ குளம் பகுதியில் உள்ள மதுரை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இன்று (பிப்.09) மதுரை மாநகர் மாவட்ட தலைவராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாரி சக்கரவர்த்தி புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். மதுரை மாவட்ட பாஜக நிர்வாகிகள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி சென்றது பெரும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் நேற்று விளக்கமளித்தார் எம்பி.”திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து வக்பு வாரிய தலைவர் என்ற முறையில், நடைமுறையில் இருந்ததை தொடருங்கள் என்று மட்டும் தான் கேட்டேன். மற்ற மத சகோதரர்களுக்கு நான் எதிரானவன் இல்லை” ” என்று கூறியுள்ளார்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தை மாத பிரதோஷம் பௌர்ணமியை முன்னிட்டு நாளை (பிப் 10) முதல் 4 நாட்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது நாளை முதல் 13ஆம் தேதி வரை தினமும் காலை 6:30 முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதி இரவில் தங்க அனுமதி இல்லை. எளிதில் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டு செல்லக்கூடாது என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது
மதுரை மாநகராட்சி 23வது வார்டுக்குட்பட்ட தாகூர் நகர் சந்திப்பு, குலமங்கலம் மெயின் ரோட்டில் செல்லூர் கண்மாயிலிருந்து உபரிநீர் செல்வதற்காக புதிதாக கால்வாய் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வரும் பிப்.12 & 13 ஆகிய 2 நாட்கள் வைகை வடகரை பகுதிகள் முழுவதும் வார்டு எண்: 21 முதல் 35 வரை மற்றும் வார்டு எண்கள்.10, 12, 14, 15, 16, 17 ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது. *ஷேர்
மதுரை உத்தங்குடி பகுதியில் இருக்கக்கூடிய தனியார் கல்லூரியில்,இன்று மாலை நடைபெறும் விழாவில் இயக்குனரும் நடிகருமான,மதுரையைச் சேர்ந்த சசிகுமார் கலந்து கொள்கிறார்.காலையிலிருந்து நடைபெற்ற பல்வேறு விழாக்களில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய பிறகு, இன்றைய தலைமுறையினருக்கு மத்தியில் தமிழ் சினிமா என்கின்ற தலைப்பில் பேச உள்ளதாக தகவல்.
மதுரை வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு பிப்.11ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது: மாவட்டத்தில் உரிமம் பெற்று இயங்கி வரும் டாஸ்மாக் சில்லறை விற்பனை மது கடைகள் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், உரிமம் பெற்ற உரிம தலங்கள் மூடப்பட்டிருக்கும். மாறாக மது விற்பனை நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் தாமரை விஷ்ணு intelligence பிரிவிற்கும், மதிச்சியம் இன்ஸ்பெக்டர் முஹம்மது இத்ரீஸ் கரிமேட்டிற்கும், செல்லூர் கிரைம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் செல்லூருக்கும், வடிவுக்கரசு செல்லூர் குற்றப்பிரிவுக்கும், திருப்பரங்குன்றம் வேதவல்லி மதிச்சியத்திற்கு, ஜெய்ஹிந்த்புரம் இன்ஸ்பெக்டர் இளவேனில் திருப்பரங்குன்றம் மாற்றம் செய்யப்பட்டனர்.
தமுக்கம் முதல் நெல்பேட்டை வரையும், பாலம் ஸ்டேஷனில் ஒரு பிரிவுமாக மொத்தம் 3 கி.மீ., தொலைவுக்கு ரூ.190 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியில் ஏ.வி., பாலத்தையொட்டி மேற்கு பகுதியில் கூடுதலாக ஒரு மேம்பாலம் அமைய உள்ளது. இதனால் விரைவில் ஏ.வி பாலத்தில் போக்குவரத்திற்கு தடை விதித்து போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என கோட்டப் பொறியாளர் மோகனகாந்தி தெரிவித்துள்ளார்.
தமிழறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவணார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் சாத்தமங்கலம் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரது உருவசிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா இன்று (7-2-2025) மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு). மு.பூமிநாதான் ஆகியோர் உடன் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.