India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையை சேர்ந்த ஆயி பூரணம்மாள் பற்றி தெரியுமா இந்த மகளிர் தினத்தில் அவரை பற்றி தெரிந்து கொள்வது மதுரை மக்களாகிய நமக்கு பெருமை. சர்வேயர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆயி பூரணம்மாள் வங்கியில் சிறிய பணியில் உள்ள இவர் மதுரை அரசு பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கியது. மட்டுமல்லாமல் ஒரு கிட்னியையே தானமாக கொடுத்துள்ளார். மதுரையிலிருந்து இவரை பற்றி தெரியாத உங்க நண்பர்களுக்கு பகிரவும்
மதுரை கீரைத்துறை ‘அட்டாக்’ பாண்டி. கடந்த தி.மு.க., ஆட்சியில் மதுரை வேளாண் விற்பனைக்குழு தலைவராக இருந்தார். மதுரையில் ஒரு நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவரது சகோதரி மகனின் திருமணத்திற்கு பரோல் கோரிய நிலையில் மார்ச் 9 அதிகாலை 5:00 முதல் மாலை 5:00 மணிவரை பரோல் அனுமதித்த மதுரை ஐகோர்ட் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
மதுரை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சேவைகள் குறித்த குறைதீர்க்கும் முகாம் நாளை குடிமைப் பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் புதிய ரேஷன் அட்டை பெறுதல், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்ற புகார்களுக்கு மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெங்காயத்தில் அழுகல் நோயை கட்டுப்படுத்த விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய பயிர் பாதுகாப்பு முறைகளை மதுரை தோட்டக்கலைத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதில் ஒரு கிலோ விதைக்கு கார்பென்டசிம் 2 கிராம் அல்லது திரம் ஒரு கிலோவுக்கு 4 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். நீர் தேங்க கூடிய வயல்களில் உடனே ஊட்டச்சத்துக்காக 19:19:19 என்ற உரத்தை 1 லிட்டர் தண்ணீரில் 2 கிராம் கலந்து தெளிக்க வேண்டும்.
தே.கல்லுப்பட்டி பேரூராட்சி அருகே அம்மாபட்டி கிராமத்தில் இயங்கி வரும் கல்குவாரியை தடை செய்ய கோரி இன்று சுமார் 11 மணியளவில் டி.கல்லுப்பட்டி காவல்நிலையம் முன்பாக அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100 க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பதற்றமான சூழல் நிலவுவதால் அப்பகுதியில் போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கான இலவச
பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது 2025இல் நடத்தப்படவுள்ள குரூப்-2,2A,4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெறுகிறது.மேலும் விவரங்களுக்கு 96989 36868 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அரசுப் பணியில் சேர்வதே லட்சியமாக வைத்திருப்போர்க்கு SHARE செய்து உதவவும்.
உணவு, உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்க முடியாதவர்களுக்கு ‘பேரியாட்டிக் சர்ஜரி’ செய்ய டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். சென்னை ராஜிவ்காந்தி, ஸ்டான்லி மருத்துவமனைகளில் இந்த அறுவை சிகிச்சை உள்ள நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் துவங்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. டாக்டர்கள்,நர்ஸ்கள் பயிற்சி பெற்ற நிலையில் விரைவில் துவங்கப்படவுள்ளது. உடல் எடையை குறைக்க நினைக்கும் உங்க நண்பர்களுக்கு பகிருங்கள்.
மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒருவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் கண்டால், அவரது தலைமுறைக்கே தோஷ நிவர்த்தி கிடைத்து விடும் என்பதும் சித்திரை மாதம் நடக்கும் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தால் வழக்குகளில் வெற்றி உண்டாகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.இப்பயிற்சி முடிந்தவுடன் தகுதியான நபர்களுக்கு,பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக அயல்நாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். தாட்கோ www.tahdco.com மூலம் விண்ணப்பிக்கலாம்.
பிரபல எழுத்தாளரும் திரைப்பட நடிகரும் நாடக இயக்குனருமான மு.ராமசாமி மதுரை வந்துள்ளார். மதுரையில் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ரயில் மூலம் மதுரை வந்த அவரை இலக்கியவாதிகளும் திரைப்பட ரசிகர்களும் வரவேற்றனர். இவர் பிரியாணி பிரியராக நடித்த கருப்புதுரை கேடி என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.