India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வைகை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக பேரிடர் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்னை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ளார்.
தேவையான நபர்கள் உதவி எண் – 04522546161 மற்றும் 1077 பயன்படுத்திக் கொள்ளலாம்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, வட பணகுடி இடையே ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம் – நாகர்கோவில் இடையே இரவு 11 மணிக்கு இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் வரும் அக்.22 ஆம் தேதி தாம்பரம் – வள்ளியூர் வரை மட்டுமே இயக்கப்படும். நாகர்கோவில் – தாம்பரம் இடையே மாலை 3.50 மணிக்கு இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் வருகிற அக்.23ம் தேதி வள்ளியூரிலிருந்து மாலை 4:20 மணிக்கு இயக்கப்படும்.
கூல் லிப் கவரில் மண்டை ஓட்டுடன் கூடிய மனித எலும்புக் கூடு மற்றும் எச்சரிக்கை வாசகம் இடம் பெற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கூல் லிப் பாக்கெட்டில் உள்ள “Tobacco users die younger” என்ற வாசகம் இறக்கும் வரை இளமையாகவே இருக்கலாம் என புரிந்துகொள்ளும் விளம்பரம் போல் இருப்பதாக நீதிமன்றம் விமர்சனம் செய்து அதிருப்தி தெரிவித்துள்ளது.
மதுரையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்களுக்கு தளவாடங்கள் மற்றும் விநியோக சங்கிலி துறை மூலம் கிடங்கு மேலாண்மை, கிடங்கு பிக்கர் மற்றும் பேக்கர் பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சங்கீதா இன்று (அக்.14)தெரிவித்துள்ளார். இப்பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
மதுரை மாநகர் பகுதியில் நேற்று போலீசார் அதிரடியாக கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது விளக்குத்தூண் பகுதியில் ஒரே கடையில் மட்டும் 10 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபோல் தெற்கு வாசலில் உள்ள கடை ஒன்றில் ஒரு கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் பல்வேறு கடைகளில் சோதனை நடத்தி மொத்தம் 10 பேரை கைது செய்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 2ல் துவங்கி நவம்பர் 8ல் நிறைவடைகிறது. கோயிலில் நவம்பர் 2, காலையில் உற்சவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் வள்ளி, ஆறுமுகம் கொண்ட சண்முகருக்கு காப்பு கட்டப்படும். அதனைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவம்பர் 6ல் வேல் வாங்குதல், நவம்பர் 7ல் சூரசம்ஹாரம், நவம்பர் 8 காலையில் தேரோட்டமும் நடைபெறுகிறது.
மதுரை தனக்கன்குளத்தை சேர்ந்த மின்வாரிய அலுவலர் சேகர் என்பவர் மகன் சண்முக பாலன் 19. மதுரை அரசு வேளாண் கல்லூரியில் பயின்று வரும் சண்முக பாலன் நேற்றிரவு வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடலை மீட்ட போலீசார் மாணவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து சக மாணவர்கள் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட ஆரப்பாளையம் கருடர் பாலம் பகுதியில் நேற்று பெய்த தொடர் கனமழையின் காரணமாக நீர் முழுமையாக நீரில் மூழ்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது அதனை தொடர்ந்து தற்போது மாநகராட்சி ஊழியர்கள் மூலம் நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் இருவரும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்
தென்னக ரெயில்வே சார்பில் விடுமுறை கால பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. நெல்லையிலிருந்து மதுரை வழியாக செங்கல்பட்டு வரை சிறப்பு ரயில் நெல்லையில் இருந்து இன்று(அக்.13) மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு இரவு 7.55 மணிக்கு திருமங்கலம் ரெயில் நிலையம் வந்தடைகிறது. இரவு 8.25 மணிக்கு மதுரை வந்தடைகிறது. அதிகாலை 3.30 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்.
மதுரையில் நேற்று(அக்.12)இரவு சுமார் 3 மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் மழை பெய்யும் நேரங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.