India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்ட விவசாயிகளின் குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும். இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அக்.18, காலை 11 மணிக்கு நடைபெறும். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கலாம் என மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா நேற்று (அக்.15) அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட சுகாதார அலுவலகத்தின் கீழ் உள்ள மாவட்ட புகையிலை தடுப்பு அலகு மற்றும் மாவட்ட தடுப்பு மருந்து கிடங்கில் காலிப்பணியிடமாக உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தகுதியானவர்கள் 30.10.2024ம் தேதிக்குள் விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான https://madurai.nic.in/ notice category / recruitment/ என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சென்னை, திருவள்ளுவர், செங்கல் பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக உயர்நீதிமன்ற சென்னை அமர்வுக்கு நாளை (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மதுரை கிளை செயல்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் நாளை மதுரை அமர்வில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் 07/11/2024 சூரசம்ஹார நிகழ்வும், 08/11/2024 அன்று சுவாமி புறப்பாடுகள் நிகழ்வுகள் நடைபெறுவது. பக்தர்களிப்பி நலனை கருத்தில் கொண்டு இரு நாட்கள் திருமண வைபவம் நடத்த அனுமதி கிடையாது எனவும் சன்னதி தெருவில் உள்ள உப கோவிலான சொக்கநாதர்சுவாமி திருக்கோயிலில் இரண்டு நாட்களுக்கு பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளில் காலை, இரவு தலா 1 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் காலை ஒரு மணி நேரமும் மாலை ஒரு மணி நேரமும் என தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டுமென ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை அருகே ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த மதுரை கள்ளிக்குடியை சேர்ந்த மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சென்னை தி.நகரில் நடைபெற இருந்த குறிப்பிட்ட சமுதாய அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பிரச்சனை ஏற்படுத்த இருப்பதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அப்போது 3 இரும்பு பைப், 2 கத்தி பறிமுதல் செய்தனர்.
மதுரை மாநகரின் பல்வேறு பகுதியில் நேற்று முன் தினம் மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் இரவு முழுவதும் தண்ணீர் தேங்கிய பகுதிகளை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் இன்று மதுரையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
மதுரை மாநகரில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறை தீவிர சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநகர் பகுதியில் நேற்று ஒரே நாளில் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் 2 கிலோ கஞ்சா 2 செல்போன்கள் ஒரு ஆட்டோ உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா வேட்டை தொடரும் என போலீஸ் தெரிவித்துள்ளது.
மதுரையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வைகை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக பேரிடர் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்னை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ளார்.
தேவையான நபர்கள் உதவி எண் – 04522546161 மற்றும் 1077 பயன்படுத்திக் கொள்ளலாம்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, வட பணகுடி இடையே ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம் – நாகர்கோவில் இடையே இரவு 11 மணிக்கு இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் வரும் அக்.22 ஆம் தேதி தாம்பரம் – வள்ளியூர் வரை மட்டுமே இயக்கப்படும். நாகர்கோவில் – தாம்பரம் இடையே மாலை 3.50 மணிக்கு இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் வருகிற அக்.23ம் தேதி வள்ளியூரிலிருந்து மாலை 4:20 மணிக்கு இயக்கப்படும்.
Sorry, no posts matched your criteria.