India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேவர் குருபூஜை மற்றும் மருது சகோதரர்கள் குருபூஜைக்கான ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அகமுடையார் மக்கள் மகா சபை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றானதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமான மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் பெளர்ணமியன்று நடைபெறும் சிறப்பு பெற்ற விழாவான ஐந்து கருடசேவை இன்று(அக்.,17) கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
மாமன்னர் மருது பாண்டியர் நினைவு நாள், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன்கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிகள் தொடர்பாக மதுரை நகரிலும், மதுரை மாவட்டத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் காவல் ஆணையர் லோகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
மதுரையை தலைமையிடமாக கொண்ட ‘நியோமேக்ஸ்’ மோசடி வழக்கில், ஜாமீன் கோரிய மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி, ” இந்த வழக்கில் என்ன நடக்கிறது? இன்னும் எவ்வளவு காலம் தேவைப்படும்? என கேட்டதோடு, அக்.19ம் தேதிக்குள் நியோ மேக்ஸ் சொத்துக்களை இணைத்து அரசாணை வெளியிட தவறும் பட்சத்தில், பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி மற்றும் உள்துறைச்செயலாளர் ஆஜராக நேரிடும் என்று எச்சரித்தார்.
அதிமுகவின் மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், திமுக அரசு சென்னையில் கார் ரேஸ் நடத்த காட்டிய அக்கறையில் 50 சதவீதம் கூட மழை நீர் வடிகால் அமைத்து மக்களை பாதுகாப்பதில்லை. அப்படி செய்திருந்தால் மக்களை மழை பாதிப்பிலிருந்து காப்பாற்றி இருக்கலாம். மக்களுக்கு இல்லம் தேடி கல்விக்கு பதிலாக மழை வெள்ளம் வந்துவிட்டது என்று விமர்சனம் செய்துள்ளார்.
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள் உரிமத்தை ‘ஆன்லைன்’ மூலம் மட்டுமே புதுப்பிக்க வேண்டும்’ என, தொழிலக பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குனர் வேலுமணி தெரிவித்துள்ளார். வரும் அக்.31ம் தேதிக்குள் மேற்கண்ட 3 மாவட்டங்களில் உள்ள பதிவு பெற்ற தொழிற்சாலைகள் தங்கள் உரிமத்தை, www.dish.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து புதுப்பித்து கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி சரகம் குமுட்ரரம் பட்டி பிரிவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 85 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. வாகனத்தை ஓட்டி வந்த மதுரையைச் சேர்ந்த கண்ணன் (42) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 85 கிலோ கஞ்சா, கடத்தி வந்த வாகனம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அனைத்து ஊராட்சி செயலர்களை ஒருங்கிணைத்து தேவையான முன்னேற்பாடுகள் ஏற்படுத்துவது தொடர்பாக அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் ஒருங்கிணைத்து கூட்டம் நடத்திட மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் குறித்த தகவல்களை 94981-81206 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்த் தெரிவித்துள்ளார். மேலும் கஞ்சா மற்றும் போதைப் பொருள் நடமாட்டம் தகவல்களை தருபவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படும் அச்சமின்றி புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகர் ஊர்க்காவல் படைக்கு பணியாற்ற அக்.23ஆம் தேதி ஆள்சேர்ப்பு முகாம் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்த 20 முதல் 40 வயது உடைய இளைஞர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தமுக்கம் மைதானம் எதிரே ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.