India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2023 பட்ஜெட்டில் செயற்கை அறிவூட்ட மேம்பாட்டுக்காக 3 “சீர்மிகு நிறுவனங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தேர்வில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் நகரங்களின் உயர் கல்வி நிலையங்கள் விண்ணப்பித்து போட்டி போட்டும் உத்தரபிரதேசம், பஞ்சாப், டெல்லி ஆகிய ஐ.ஐ.டி கள் தேர்வு பெற்றுள்ளன. தென்மாநிலங்களிலிருந்து ஒரு உயர்கல்வி நிறுவனம்கூட தேர்வு பெறாதது ஐயங்களை உருவாக்குவதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்
மதுரை மாநகர ஊர்க்காவல்படைக்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் வருகின்ற அக். 23 அன்று மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத 20 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். இந்தப் பணிக்கு குறைந்த பட்சம் 165 செ.மீ. உயரமுள்ள ஆண்களும், குறைந்தபட்சம் 155 செ.மீ. உயரமுள்ள பெண்களும் வருகின்ற 21 ஆம் தேதி காலை 10 மணி முதல் 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
நாகர்கோவில் – கோவை ரயிலில் நடுப்பக்க படுக்கையை சங்கிலியால் இணைக்க முயன்ற போது கீழ்ப்பக்க படுக்கையில் படுத்திருந்த சிறுவன் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே ரயில் பயணிகள் நடுப்பக்க படுக்கையை சங்கிலியை இணைக்கும் போது மிகுந்த கவனத்துடனும் சக பயணிகளின் உதவியோடு படுக்கையை இணைத்து பாதிப்பில்லா பயணத்தை மேற்கொள்ள தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவுறுத்தியுள்ளது.
தேவர் ஜெயந்திக்கு பசும்பொன் செல்லும் வாகனங்களுக்கு முன்கூட்டியே பாஸ் வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் டிஜிபி, ராமநாதபுரம் ஆட்சியர்,காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. வாகனங்களுக்கான பாஸ் தாமதமாகவே வழங்கப்படுவதால் பெரும்பாலானோர் பசும்பொன்னில் மரியாதை செலுத்த முடியாமல் போவதால் ஒரு வாரத்திற்கு முன் வழங்க கோரி தாக்கல் செய்த மனுவில் உத்தரவிட்டுள்ளது.
ரூ.6,000 கோடி மோசடி செய்த வழக்கில் நியோமேக்ஸ் நிறுவன சொத்துக்களை நாளைக்குள் (அக்.19) முடக்குவதற்கான அரசாணை வெளியிடாவிட்டால், பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி ஆஜராகுமாறு உத்தரவிட நேரிடும் என மதுரை ஐகோர்ட் கிளை எச்சரித்துள்ளது. மேலும் சொத்துகளை முடக்குவதற்கான அரசாணை பிறப்பிக்க ஏற்கனவே போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இனியும் அவகாசம் அளிக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சி திமுக முன்னாள் மண்டல தலைவர் வீ.கே.குருசாமியின் கீரைத்துறை வீட்டில், கீரைத்துறை காவல்துறையினர் சோதனையிட்டனர். அப்போது நாட்டுத் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது. இதனால் வீ.கே.ஜி மணியின் நண்பர்களான பழனிமுருகன் மற்றும் முனியசாமி ஆகியோர் குருசாமி வீட்டில் நாட்டு துப்பாக்கியுடன் இருந்தபோது காவல்துறையினர் இருவரையும் கைது செய்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் இரா.சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டிளித்து கூறியதாவது, மெட்ரோ பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு தமிழக அரசு கேட்டுக்கொண்டதன்பேரில் மத்திய அரசின் நிதியில் அமைக்கப்பட இருக்கிறது. கவர்னரும், தி.மு.க.வும் புது காதலர்களாக இணைந்து செயல்படுவதாக செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார். அவரது பேச்சை, ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என நகைச்சுவையான பேசினார்.
மதுரை விரிவாக்கம் செய்வதால், மாற்று சுற்றுச்சாலை மூலம் அருப்புக்கோட்டை ரோடு, தூத்துக்குடி, குமரி, செங்கோட்டை சாலையிலிந்து மதுரை ஏர்போர்ட் வரக்கூடியவர்கள், தற்போது உள்ள பயண தூரத்தை விட 5 கிமீ தூரம் சுற்றி வர வேண்டிய நிலை ஏற்படும். சுற்றுச்சாலையை பயன்படுத்தி மதுரை வருவோரும், மதுரையிலிருந்து திருமங்கலம் மார்க்கமாக செல்வோர் 5 கி.மீ.க்கும் அதிகம் சுற்ற வேண்டியிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியான மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம், ஊமச்சிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு பணியில் இருக்கக்கூடிய காவலர்களின் தொடர்பான தொலைபேசி எண்ணை மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஏதேனும் புகார்கள் இருக்கும் பட்சத்தில் இவர்களை தொடர்பு கொள்ளலாம்.
தேவர் குருபூஜை மற்றும் மருது சகோதரர்கள் குருபூஜைக்கான ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அகமுடையார் மக்கள் மகா சபை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.