India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் நாளை(அக்.22) மதுரை வருகை தர உள்ளார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கூடுதல் மருத்துவ கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் புதிய உபகரணங்களின் சேவையை துவக்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட மானகிரி பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, அரசு (ஆங்கில வழி கல்வி) பள்ளி அமைக்க உத்தரவிட கோரிய பொதுநல வழக்கில் இன்று(அக்.21) மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மதுரை மானகிரி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த மனுவில் அதிரடி உத்தரவு பிறப்பிப்பு
மதுரையில் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,வேட்பாளராக முதல் நாள் கொடுத்த வாக்குறுதியை மறவாமல் மக்களிடம் அறிக்கையை சமர்ப்பித்து வருகிறேன். அதில் இதுவரை நான் என்னென்ன செய்திருக்கிறேன் என்பதை தெளிவாக மக்களிடம் வழங்கியுள்ளேன். 8 வருடம் முடிந்து 16வது அறிக்கையாக மக்களிடம் கொடுத்திருக்கிறேன். இது மக்களுக்கு ஒரு தெளிவை கொடுக்கும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
மதுரை சாத்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்துள்ளனர். அவருக்கு ஒர் ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறார். குழந்தைகள் உதவி எண்ணுக்கு அச்சிறுமி கொடுத்த தகவலின் பேரில் சாப்டூர் ஒன்றிய சமூகநலத்துறை அதிகாரி பாண்டியம்மாள் புகாரில் இளையராஜா, பொண்ணுகுட்டி, ராஜாகனி, ராஜபாண்டியம்மாள் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் இன்று முதல் நாளை காலை 8.30 வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 65% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை குறித்து மதுரையில் எய்ம்ஸ் செயல் இயக்குனர் ஹனுமந்தராவ் நேற்று கூறியதாவது, டெண்டர் வெளியிடும் போதே குறிப்பிடப்பட்டது போல முதற்கட்டமாக விடுதி மற்றும் வகுப்பறை கட்டுமான பணிகள், 18 மாதங்களில் நிறைவு பெறும். 2025 டிசம்பரில் முதல்கட்ட பணி முடிந்த பின், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான மாணவர்கள் சேர்க்கை நேரடியாக இங்கு நடைபெறும்” என்று கூறினார்.
தீபாவளி பண்டிகைக்காக மதுரை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்தும் மலிவான விலையில் புத்தாடை வாங்குவதற்கு மதுரைக்கு பொதுமக்கள் வருகை தருகின்றனர். ஜவுளிக்கடைகள் நிறைந்த விளக்கத்தூண் பகுதிகளில் இன்று காலை முதல் பொதுமக்கள் புத்தாடை வாங்க குவிந்ததால் மக்கள் வெள்ளம் கடல் போல் காட்சி அளித்தது. இதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதுடன் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலை 66 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அக்டோபர் 22 இல் நடைபெற உள்ளது. அன்று மதியம் 2:30 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் கவர்னர் ரவி தலைமையில் உயர் கல்வி அமைச்சர் கோவி செழியன் பங்கேற்கிறார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் டாக்டர் சுதா சேஷய்யன் பட்டமளிப்பு உரை நிகழ்த்துகிறார். பட்டமளிப்பு விழா ஏற்பாடுகளை பதிவாளர் ராமகிருஷ்ணனும், அரசு ஆட்சி மன்ற குழுவினர் செய்கின்றனர்.
மதுரை மாவட்டத்தில் விதிமீறல் மற்றும் அனுமதியற்ற கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்க கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதா, இல்லையெனில் எவ்வளவு காலவரம்பிற்குள் அமைக்கப்படும் என கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. கண்காணிப்புக்குழு அமைக்கக்கோரி மதுரை மயில்சாமி தாக்கல் செய்த பொதுநல மனுவில் வரும் 25 ஆம் தேதிக்குள் ஆட்சியர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஆவின் தீபாவளி இனிப்பு வகைகள் உற்பத்தி மற்றும் விற்பனை டைபெற்று வருகிறது. ஆவின் பொது மேலாளர் சிவகாமி கூறும் போது ஆவினில் பல்வேறு இனிப்புகள் அடங்கிய காம்போ பேக் ரூ.300 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நெய் பாதுஷா. முந்திரி அல்வா அடங்கிய காம்போ பேக் ரூ.900 க்கு சிறப்பு சலுகையில் விற்பனையாகிறது. ஆவின் ஸ்பெஷல் காம்போ பேக் பற்றிய விளம்பரங்களும் பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டுள்ளன என்றார்.
Sorry, no posts matched your criteria.