India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்கு வங்காளத்தில் டாணா புயல் கரையை கடக்க இருப்பதால் திருநெல்வேலி இருந்து மதுரை வழியாக செல்லும் 1. 22606 புருலியா அதிவிரைவு ரயில், 06087 ஷாலிமர் அதிவிரைவு ரயில், 20895, 20896 புவனேஸ்வர் – ராமேஸ்வரம் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் எப்பொழுது மீண்டும் இயங்கும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நாளை(அக்.24) சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணம், ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. நாளை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதனைச் சார்ந்த 10 கோயில்களில் உள்ள உண்டியலை அனைத்தும் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படும். அதன்படி நேற்று(அக்.22) அனைத்து கோயில்களின் உண்டியல்கள் திறந்து மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள பழைய திருமண கல்யாண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. காணிக்கையாக 83 லட்சத்து 24 ஆயிரத்து 637 ரூபாயும் 196 கிராம் தங்கமும் 699 கிராம் வெள்ளியும் கிடைக்கப்பெற்றது.
மதுரை மாநகர் மாவட்ட பாஜக துணைத் தலைவர் ராஜ்குமார் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார். அதில் இந்தியாவில் இந்தியனாகவும், தமிழகத்தில் தமிழனாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களுக்கு திராவிட நாடு எதற்கு?, மக்களே ஓட்டு வங்கி அரசியலுக்காக இல்லாமல் உணர்வில் இந்தியனாகவும் இனத்தில் தமிழனாகவும் வாழ்வோம் என்றும், திராவிட நாட்டை கண்டுபிடித்துக் கொடுத்தால் ஆயிரம் பொற்காசுகள் என சர்ச்சை போஸ்டர் அடித்துள்ளார்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் கிருஷ்ணன் முன்னிலையில் இன்று (அக்.22) திருக்கோயில் மற்றும் 10 உபகோயில்களின் நிரந்தர உண்டியல்கள், 5 திருக்கோயில்களின் அன்னதான உண்டியல்கள் திறப்பு நடைபெற்றது. இதில் ரூ.83,24,637 ரொக்க பணம் மற்றும், 196 கிராம் தங்கமும், 699 கிராம் வெள்ளியும், 196 வெளிநாட்டு பணமும் காணிக்கையாக பெறப்பட்டது.
நாகர்கோவிலில் இருந்து இம்மாதம் அக்.24 மற்றும் அக்.27ம் தேதிகளில் காலை 6.15 மணிக்கு புறப்படும். மும்பை விரைவு ரயில், விருதுநகர் – மானாமதுரை – காரைக்குடி – திருச்சி தடத்தில் செல்லும். இந்த ரயில் கூடுதலாக மானாமதுரையில் நின்று செல்லும். மதுரை, திண்டுக்கல் வழியாக இயங்காது என்று திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே இன்று(அக்.22) தெரிவித்து உள்ளது
ராஜபாளையம் அருகே 4 ஏக்கர் நிலத்தை நித்தியானந்தாவின் பேரில் அபகரிக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் நித்தியானந்தாவின் சொத்துக்களை நீதித்துறை பாதுகாக்க வேண்டுமா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. நித்தியானந்தா தலைமறைவாய் இருந்து நீதித்துறைக்கு சவால் விடுகிறார், நித்தியானந்தாவிற்கு பல வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளது; அவர் நீதிமன்றத்திற்கு வருவதில்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்
யூடியூப்பர் இர்ஃபான் தனது குழந்தைக்கு தொப்புள் கொடியை வெட்டிய சர்ச்சை வீடியோ விவகாரத்தில் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரையில் பேட்டியளித்த அவர், சட்ட ரீதியாகவும் துறை ரீதியாகவும் நடவடிக்கை தொடரும் எனவும், மருத்துவர் நிவேதிதா பயிற்சியை தொடர தடை விதிக்க மருத்துவ கவுன்சில் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
திருமங்கலம் நகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் நாகரத்தினம், 50, ஈஸ்வரி, 40. நேற்று மதியம், 3:45 மணிக்கு நகராட்சியில் இருந்து கற்பக நகர் பகுதிக்கு வேலைக்கு புறப்பட்டனர். திருமங்கலம் விமான நிலைய சாலையில் டூ-வீலரில் வந்தவரிடம் ‘லிப்ட்’ கேட்டு சென்றனர். தடுமாறி விழந்த போது வந்த கனரக லாரி ஏறியதில், இரு பெண்களும் தலை நசுங்கி பலியாயினர். டூவிலர் ஓட்டியவர் தப்பினார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரையில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் நாளை(அக்.22) மதுரை வருகை தர உள்ளார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கூடுதல் மருத்துவ கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் புதிய உபகரணங்களின் சேவையை துவக்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.
Sorry, no posts matched your criteria.