India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிளஸ் 2 முடித்து மருத்துவ கனவில் உள்ள மாணவர்களுக்காக மதுரையில் தனியார் நாளிதழ் – ஸ்டாரெட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் நீட் மாதிரி நுழைவுத் தேர்வு மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் ஏப்.27 காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 96777 60856 என்ற அலைபேசி எண்ணில் இன்று மாலை (ஏப்.23) 5 மணிக்குள் முன் பதிவு செய்ய வேண்டும்.
குழந்தை சிகிச்சைப் பிரிவுக்கு மேலும் 3 தளங்களுடன், அதிநவீன மருத்துவக் கட்டமைப்புகளுடன் மேம்படுத்தப்படவுள்ளது. இதற்காக அரசு ரூ. 20 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. இதன் மூலம் தென் தமிழகத்தில் தனித்துவம் மிக்க குழந்தைகள் சிகிச்சைப் பிரிவாக மதுரை அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும் குழந்தைகளுக்கான அனைத்து வகையான சிகிச்சைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 217 பணியாளர், 4 குறு அங்கன்வாடி பணியாளர், 152 உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்.23) கடைசி நாள். <
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் விடுத்துள்ள அறிக்கையில்; ஆடு மாடு போன்ற கால்நடைகள் மற்றும் துணிகள் உலர்வதை மின் அல்லது மின் இழுவை கம்பிகளில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கட்டிட பணி நடைபெறும் போது உயர் தாழ்வழுத்த மின் பாதைகள் போதிய இடைவெளி விட்டு கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும். உயரமான இரும்புக் கம்பிகளை மின் பாதை அருகே பயன்படுத்த வேண்டாம் என்று தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி) சார்பில் 7 முதல் 9ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிக்கான சேர்க்கைக்கு மாணவர்கள் பங்கேற்கலாம்.மதுரை மாவட்ட அளவிலான தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கபடி, வாலிபால் என மே 7ல் மாணவர்களுக்கும், மே 8ல் மாணவிகளுக்கும், காலை 7 மணிக்கு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தேர்வு நடக்கிறது. இதற்காக வரும் 5க்குள் விண்ணப்பிக்கலாம்.
தமிழக ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் நர்ஸிங் அசிஸ்டன்ட் பணிக்கு 100 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ரூ.25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. 18 முதல் 38 வயதுக்குட்பட்ட ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். <
மதுரை: ராமமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், சித்திரை திருவிழாவில், மக்களின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். விசாரித்த நீதிபதிகள்,சித்திரை திருவிழா ஏற்பாடுகளை அரசு சிறப்பாக செய்து வருகிறது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் விளம்பர நோக்கில் மனுவை தாக்கல் செய்துள்ளார் என்று கூறி தள்ளுபடி செய்தனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் 26.04.2025 அன்று ஓவிய பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது. இவ்வாய்ப்பினை 6 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.மேலும், 26.04.2025-அன்று நடைபெறவுள்ள ஓவிய பயிற்சி பட்டறை குறித்து கூடுதல் விவரங்களை கலை பண்பாட்டு துறையை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
மதுரையில் விடுமுறையை கழிக்க சிறந்த சுற்றுலாத்தலங்கள்
▶சமணர் மலை
▶திருமலை நாயக்கர் அரண்மனை
▶மீனாட்சி அம்மன் கோயில்
▶வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்
▶இடைக்காட்டூர் தேவாலயம்
▶அழகர் கோவில்
▶திருப்பரங்குன்றம் முருகன் கோயில்
▶காசிமார் பெரிய மசூதி
▶காந்தி நினைவு அருங்காட்சியகம்
▶புது மண்டபம்
▶செயிண்ட் மேரி கதீட்ரல்
மதுரையில் உள்ள இந்த இடங்களுக்கு செல்ல விரும்பும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
தமிழகத்தில் போலீசாருக்கு சங்கம் இல்லாதது ஏன்’ என உயர்நீதி மன்றம் மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. காவல்துறையினருக்கு வார விடுப்பு வழங்கும் உத்தரவை அமல்படுத்த கோரி காவலர் மதுரை ஆஸ்டின்பட்டி காவலர் செந்தில் குமார் தாக்கல் செய்த மனுவில், போலீசாருக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என்ற அரசு உத்தரவு எவ்வகையில் பின்பற்றப்படுகிறது’ என தமிழக டி.ஜி. பி., பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.