India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
“தூங்கா நகரம்” என அழைக்கப்படும் மதுரை இரவில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் பருந்து பார்வை புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மீனாட்சியம்மன் கோவில் கோபுரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த பிரமாண்ட புகைப்படத்தில் மதுரை மாநகரம் முழுவதுமாக காட்சியளிக்கிறது. இன்று மாலை எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
மதுரை மாநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் குறித்த தகவல்களை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ளது. குற்றச்சம்பவங்கள் சார்ந்த புகார்களுக்கு அவர்களது அலைபேசி எண்களை வழங்கியுள்ள மாநகர காவல்துறை அவர்களை அழைத்து உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நேற்று தீபாவளி கொண்டாட்டத்தின் போது வெடி வெடித்து காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனைடில் பலர் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஆண்கள் 5 பேர், சிறுவர்கள் 2 பேர் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்ற சென்றனர். அதிக காயம் காரணமாக ஆண்களில் 16 பேரும், பெண்களில் 2 பேரும், சிறுவர்கள் 4 பேர் என மொத்தம் 22 பேர் மருத்துவமனையில் இன்று தொடர் சிகிச்சையில் உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரையில் நாள்தோறும் 900 முதல் 950 டன் குப்பைகள் மாநகராட்சி பகுதிகளில் அள்ளப்பட்டு வருகின்றன. தற்போது தீபாவளியை முன்னிட்டு மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் 30.10.2024 அன்று 994 டன் குப்பைகளும், 31.10.2024 அன்று 326 டன் குப்பைகளும், 01.11.2024 (6.00 மணி வரை) அன்று 370 டன் குப்பைகளும் என மூன்று நாட்களில் மட்டும் 1690 டன் குப்பைகள் 4051 மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அகற்றப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விரதம் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் நாளை (நவ.2) காலை தொடங்குகிறது. இந்நிலையில் இன்று (நவ.1) விரதம் மேற்கொள்ளும் பொதுமக்கள் கோவில் மண்டபங்களில் போர்வை விரித்தும், சாக்பீஸ்களால் தங்களது பெயர், ஊரின் பெயர் எழுதி இடம் பிடித்து வருகின்றனர். இதனால் கோவிலில் இடம் பிடிப்பதில் போட்டா போட்டி நடைபெற்று வருகிறது.
மதுரை மாநகராட்சியில் தீபாவளி பண்டிகை முடிந்த மறுநாளான இன்று ஒரே நாளில் 1,000 மெட்ரிக் டன் குப்பைகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளது. இந்தக் குப்பைகளை அகற்றும் பணியில் 3,500 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 100 வார்டுகளிலும் அகற்றப்படும் குப்பைகள் வெள்ளக்கல் குப்பை கிடங்கிற்கு லாரிகள் மூலமாக தொடர்ந்து கொண்டு செல்லப்பட்டு வருகிறது. நாளையும் இப்பணி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில், குறிப்பிட்ட நேரத்தை தாண்டி பட்டாசுகள் வெடித்தது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டாசு வெடித்து உள்ளிட்ட காரணங்களால், 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் மதுரை மாநகர காவல் துறை சார்பாக, 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசின் விதிமுறைகளை மீறியது, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் வைகையாற்றின் கரையோரம் இறைச்சி கழிவுகளை சாலைகளில் கொட்டியதற்காக முதற்கட்டமாக 5 கடைகளுக்கு தலா ரூ.10,000 விதம் ரூ.50,000 அபராதம் வசூல் செய்யப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் இறைச்சி கழிவுகளை கொட்டினால் கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை : அலங்காநல்லூர் பேரூராட்சி பேருந்து நிலையம் மறுசீரமைக்கப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே இருந்த “அம்பேத்கார் பேருந்து நிலையம்” என்ற பெயரை மாற்றி “கலைஞர் நூற்றாண்டு வணிக வளாகம்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இதை எதிர்த்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, கலைஞர் நூற்றாண்டு வளாகம் என்ற பெயர் தற்போது அகற்றப்பட்டுள்ளது.
மதுரையில் 345 கோடி செலவில் 640,000 சதுர அடியில் புதிய டைடல் பார்க் அமைய உள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் 2 கட்டமாக அமைய உள்ள டைடல் பார்க் 12 தளங்களுடன் அமைகிறது. இதற்கான உட்கட்டமைப்பு பணிகள், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு தகுதியான நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து இ-டெண்டர் விடப்பட்டது. டைடல் பார்க் மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.