India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இன்று முதல் ஐப்பசி மாத கோலாட்டம் உற்சவம் விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோலாட்டம் அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. வீதியுலாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோலாட்டம் ஆடி மீனாட்சி அம்மனை வழிபட்டனர்.
தீபாவளி விடுமுறையை தொடர்ந்து தென்மாவட்ட மக்கள் மதுரையிலிருந்து சென்னை செல்ல அலைமோதி வருகின்றனர். மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி மதுரை ஆம்னி பேருந்து நிலையத்தில் சென்னை செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.3500 கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமான நாட்களில் ரூ.800 முதல் ரூ.1100 வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் தற்போது கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை உற்சவம் 10.11.2024 ஆம் தேதி முதல் 19.11.2024 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 10 நாட்களும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் ஆடி வீதி புறப்பாடாகியும், 16.11.2024 திருக்கார்த்திகை அன்று மாலை திருக்கோயில் முழுவதும் இலட்ச தீபம் ஏற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க மதுரை – சென்னை இடையே முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட மெமு (மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபில் யூனிட் – கழிப்பறை வசதியுடன் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை) ரயில் சேவை நாளை (நவ.3) இரவு துவங்கவுள்ளது. மதுரையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) இரவு 07.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.அதன்படி வரும் 05.11.2024 மேலமாரட் வீதியில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற உள்ளது.
தீபாவளி பண்டிகையால் மதுரை மாநகரில் கடந்த மூன்று நாட்களில் 2173 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மதுரை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக சுழற்சி முறையில் சுமார் 3,000 தூய்மை பணியாளர்கள் மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் களப்பணியாற்றி குப்பைகளை தொடர்ந்து அகற்றி வந்தனர். இதுவரை 2173 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையன்று 438 கோடியே 53 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது.இந்த ஆண்டு 29 கோடியே 10 லட்சம் அளவுக்கு மது விற்பனை குறைந்துள்ளது.மதுரையை முந்தி சென்னை மண்டலம் மது விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது.மதுரை மண்டலம் 30ந் தேதி 40.88 கோடி மற்றும் 31ந் தேதி 47.73 கோடி மது விற்பனையுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தது
மதுரை மாநகர் பகுதியான ஊத்தங்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளது. எனவே இந்த துணைமின் நிலையத்திற்குட்பட்ட எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்னக ரயில்வே மதுரை கூட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ரயில்வே வழித்தட பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்செந்தூர் – சென்னை எழும்பூர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வண்டி எண்-20606 திருச்செந்தூரிலிருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் செல்லும் விரைவு ரயில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி மட்டும் தாமதமாக இரவு 10.35 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படும்.
“தூங்கா நகரம்” என அழைக்கப்படும் மதுரை இரவில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் பருந்து பார்வை புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மீனாட்சியம்மன் கோவில் கோபுரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த பிரமாண்ட புகைப்படத்தில் மதுரை மாநகரம் முழுவதுமாக காட்சியளிக்கிறது. இன்று மாலை எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Sorry, no posts matched your criteria.