India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை, செல்லூர் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி கருப்பசாமி நேற்று காலை கூடல் நகர் அருகே மர்மமான முறையில் காரில் உயிரிழந்து கிடந்தார். அவர் எப்படி உயிர் இழந்தார் என்று சந்தேகம் எழுந்து வந்த நிலையில் தற்போது அவரது மரணத்திற்கு மூச்சுதிணறல் தான் காரணம் என உடற்கூராய்வில் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாநகரில் இன்று (19.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
மதுரை : இந்திய ராணுவ அக்னிவீர் படைப்பிரிவிற்கான, அக்னிவீர் பொது பணியாளர், அக்னிவீர் தொழில்நுட்பம், அக்னிவீர் எழுத்தர்- கிடங்கு மேலாளர், அக்னிவீர் தொழிலாளி ஆகிய பணிகளுக்குஆட்சேர்ப்பு பணிகள் துவங்கியுள்ளன. மதுரை உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்ரல்.10க்குள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையின் முக்கிய திருவிழாவான ” சித்திரை திருவிழா ” குறித்து மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் நேற்று ( செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது. அதன்படி, மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 8ஆம் தேதி நடைபெறுகிறது. மே 9ஆம் தேதி தேரோட்டம்.
மதுரை மேலூர் அருகேயுள்ள சொக்கம்பட்டியில் கொப்புடாரி அம்மன் கோயில் திருவிழா மார்ச் 4 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கிடாவெட்டி பொங்கல் வைத்து படையலிட்டனர். மேலுார் வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 40 ஆண்டுகளுக்கு பிறகு இத்திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாநகர் காவல் ஆணையர் எல்லைக்கு உட்பட்ட தல்லாகுளம் தெப்பக்குளம் அவனியாபுரம் தெற்கு வாசல் திலகர் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் தொடர்பான விவரங்களை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ளது பொதுமக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மதுரை கீழக்கரை கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரராக பங்கேற்ற உட்கடை கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த மகேஷ்பாண்டி (24) என்பவர் மாடு முட்டியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன் , முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைசர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மதுரை : நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பேசிய திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை. வைகோ, ” இரயில்வே வாரியத்தால் முன்பு திட்டமிடப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட தஞ்சாவூர் – மதுரை( கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை) வழியான புதிய இரயில் பாதையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் ” என்று மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
மதுரை மாவட்டத்தில் இன்று (மார். 18) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜ் பல்கலையில் பாலியல் ரீதியான புகார்கள் அதிகரித்துள்ளதாகவும் புகார் எழுந்தவுடன் அதைப் பேராசிரியர்கள் சிலர் பேசி முடிக்கிறேன் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. தொலைநிலைக் கல்வியில் எம்.பி.ஏ படிக்கும் மாணவியை, பேராசிரியர் ஒருவர் ப்ராஜெக்ட் சமர்ப்பிக்க லாட்ஜில் ஆலோசிக்க அழைப்பு விடுத்த விவகாரம் உள்ளிட்டவை கட்டப்பஞ்சாயத்துடன் முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.