Madurai

News November 4, 2024

மதுரை மாவட்டத்தின் இரவு ரோந்து காவலர்களின் எண் வெளியீடு!

image

மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியான மேலு உசிலம்பட்டி, சோழவந்தான், திருமங்கலம், ஊமச்சிகுளம் உள்ளிட்ட காவல் சிரகங்களில் இன்று (04.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் தேவைக்கு இரவு நேரங்களில் அழைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 4, 2024

மதுரையில் இன்று ஒரே நாளில் 610 கோரிக்கை மனுக்கள்!

image

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(நவ.4) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, பட்டா கோருதல், மகளிர் உரிமை தொகை, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 610 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. மனுக்கள் குறித்து துரித நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

News November 4, 2024

சீமான் திடீரென்று அந்நியனாகவும், அம்பியாகவும் மாறுவார்

image

மதுரை நிகழ்ச்சியில் இன்று(நவ.11) செய்தியாளர்களிடம் பேசிய பிரேம லதா: சீமான் திடீரென்று அந்நியனாகவும், அம்பியாகவும் மாறுவார். இதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல தேவையில்லை. என் தம்பி என்று சொன்னார், ஏன் லாரியில் அடிபட்டு சாவேன் என்று சொன்னார் என அவரிடம் தான் கேட்க வேண்டும். எப்போதும் ஒரே நிலைப்பாட்டோடு இருக்க வேண்டும். வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது என்றார்.

News November 4, 2024

மதுரையில் (அரசு) கடன் உதவி பெற சலுகைகள் நீட்டிப்பு – ஆட்சியர்

image

மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (TAMCO) மூலமாக தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் பெற ஆண்டு வருமானம் கிராமப்புறத்திற்கு ரூ. 96,000, நகர்ப்புறத்திற்கு ரூ.1.20,000 என இருந்து வந்த நிலையில் தற்போது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் அனைவருக்கும் ஆண்டுவருமானம் ரூ. 3,00,000 என உயர்த்தி ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.

News November 4, 2024

பொதுமக்கள் திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

image

மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள தத்தனேரி கீழ்பாலம் மணவாளன் நகர் பகுதியில் கழிவுநீர் பல நாட்களாக தேங்கி உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கூறியும் கழிவு நீரை அகற்ற எந்த பணியையும் செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தத்தனேரி சாலை அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பாதிக்கப்பட்டன. போலீசார் மக்களிடம் பேசி தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர்.

News November 4, 2024

மதுரை அருகே நிலச்சரிவா

image

உசிலம்பட்டியில் 58 கிராம கால்வாய் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக கண்மாய்களுக்கு நீர் வந்ததால் நிலத்தடி நீர் மட்டம் கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் தற்போது கிடைக்கும் மழைநீர் கண்மாய்களுக்கு வருவதால அடுத்தடுத்து கண்மாய்கள் விரைவாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தொடர் மழை காரணமாக ஒடைகளில் ஊற்று துவங்கியது. கன்னிமார்புரம் பகுதியில் வெள்ளமலையில் பாறை சரிவு ஏற்பட்டது. இதில் தேசம் எதுவும் ஏற்படவில்லை.

News November 3, 2024

வெள்ளி சிம்மாசனத்தில் முருகன் தெய்வானை

image

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முதல் துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் இரண்டாம் நாளான இன்று இரவு முருகன் தெய்வானை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. வீதி உலாவையொட்டி திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News November 3, 2024

கோலாட்ட அலங்காரத்தில் எழுந்தருளி மீனாட்சி அம்மன்

image

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஐப்பசி மாத கோலாட்ட உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் 2ஆம் நாளான இன்று (03.11.2024) அன்னை மீனாட்சி கோலாட்ட அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையொட்டி மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று மீனாட்சியம்மனை வழிபட்டனர்.

News November 3, 2024

ரயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத பயணிகள் கூட்டம்

image

தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து இன்று மதுரை ரயில் நிலையத்திலிருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்ல பயணிகள் குவிந்தனர். முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு ஏறினர். பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், பெரும்பாலான ரயில்களில் கூட்டம் நெரிசலுடன் பயணிகள் பயணித்து சென்றனர்.

News November 3, 2024

விஜயின் தீர்மானம் தவறானது – பாஜக

image

தேர்தலையே சந்திக்காத த.வெ.க தலைவர் விஜய்யின் ஒரே நாடு ஒரே தேர்தல் கண்டன தீர்மானம் தவறானது என பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த அனுபவத்தின் அடிப்படையில் விஜய் இதனை கூறுகிறார் என கேள்வி எழுப்பிய அவர், ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் மற்றும் அரசு பல கோடி செலவு செய்கின்றனர், இதனை குறைக்க வேண்டியது அவசியம் என்றார்.