India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வைகை நதியை சுத்தம் செய்ய பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக மதுரை ஆதீனம் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். வைகை நதியை சீரமைக்க பணி முடியும் வரை நாள் ஒன்றுக்கு 15,000 ரூபாய் கேட்டு 3 பேர் நேரில் வந்ததாகவும், வைகை நதியை சுத்தம் செய்வது மிகப்பெரிய பணி, அதை உங்களால் எப்படி செய்ய முடியும்
என கூறி பணம் தர மறுத்ததால் தன்னை தரக்குறைவாக பேசியதாக ஆதீனம் வேதனை தெரிவித்துள்ளார்.
பத்திரப்பதிவு முடிந்த அதே நாளில் பத்திரங்களை வழங்க வேண்டும்’ என, சார்பதிவாளர்களுக்கு, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலுவையில் வைக்கப்படும் பத்திரங்களின் நிலவரம், அதற்கான காரணம் குறித்து மேலதிகாரிகளுக்கு சார்பதிவாளர்கள் தகவல் அளிக்க வேண்டும்’ எனவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
சுகாதார துறையில் லேப் டெக்னீசியன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானைக்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரிய மனு மீதான விசாரணையில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை செயலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பட்டபடிப்பு முடித்த ஆய்வக நுட்பணர்களை நியமனம் செய்த பின்பு கிரேட்-3 பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை செல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை சமேத திருவாப்புடையார் திருக்கோயிலில் நவராத்திரி விழா இன்று வெகு விமர்சையாக துவங்கியுள்ளது. முதல் நாள் விழாவில் அன்னை குரவங்கமழ் குழலம்மை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சுகாதார துறையில் லேப் டெக்னீசியன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானைக்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரிய மனு மீதான விசாரணையில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை செயலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பட்டபடிப்பு முடித்த ஆய்வக நுட்பணர்களை நியமனம் செய்த பின்பு கிரேட்-3 பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை நிலையூர் பகுதியில் போலி பட்டா வழங்கிய வழக்கில் மதுரை ஆட்சியர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். இதில் தொடர்புடைய வருவாய் துறை அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என மதுரை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலிம் போலி பட்டா வழங்கிய விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆட்சியர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்தினவேல் கடந்த மார்ச் மாதம் பணி ஓய்வு பெற்றார். இதை தொடர்ந்து தற்காலிகமாக பொறுப்பு முதல்வராக செல்வராணி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது மருத்துவ கல்லூரியின் நிரந்தர முதல்வராக மதுரை அரசு மருத்துவமனையின் ENT மருத்துவராக பணிபுரியும் அருள் சுந்தரேஷ் குமாரை நியமித்து தமிழக மருத்துவ துறை உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ அலுவலகத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தக் கோரி பொன் மாணிக்கவேல் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் 4 வாரம் இன்னும் முழுமையடையாததால் தற்போது நிபந்தனையை தளர்த்த முடியாது என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்.14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
திருப்பதி லட்டு விவகாரத்தில் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் நெய் தயாரிக்கும் உரிமையை ஏன் ரத்து செய்ய கூடாது? என மத்திய உணவு பாதுகாப்பு துறை அனுப்பியுள்ள நோட்டீஸை ரத்து செய்ய கோரிய மனு மீதான விசாரணையில், நோட்டீசின் அடிப்படையில் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும் விதிகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
மதுரை மாநகராட்சியின் துணை மேயரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நாகராஜன் உள்ளிட்ட 5 பேர் கடந்த ஜூலை மாதம் வசந்தா என்ற பெண்ணை பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் சாதி ரீதியாக திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நீதிமன்ற உத்தரவின் பேரில் துணை மேயர் நாகராஜன், அவரது சகோதரர் ராஜேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.