India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நவராத்திரி விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி சிறப்பு ரயில் (06186) அக்டோபர் 8 அன்று சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 01.50 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும்.
மழைக்காலங்களில் கனமழை குறித்த தகவல்கள், வானிலை முன்னெச்சரிக்கை, மழை அளவு, நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு ஆகிய விபரங்களை தமிழிலேயே அறிந்துகொள்ள TN- Alert என்ற கைப்பேசி செயலியை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பருவநிலை தொடர்பான தகவல்களை அறிந்துக்கொள்ள ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார். மேலும் பேரிடர் தொடர்பான புகாருக்கு 1077 என்ற இலவச அழைப்பு எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் முதல் போக சாகுபடி நெல் பயிா்களில் புகையான், தத்துப் பூச்சி, இலைச்சுருட்டுப் புழு தாக்குதல்கள் பரவலாக இருப்பதால், உரிய நோய் மேலாண்மையைக் கடைப்பிடிக்குமாறு வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், இலைச்சுருட்டு புழுவைக் கட்டுப்படுத்த முள்ளுள்ள கொப்புகளைக் கொண்டு இலை மடிப்புகளைத் திறக்க வேண்டும் எனவும் வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
மதுரை திருவேடகம் காலனியைச் சேர்ந்தவர் அய்யனார் அவரது மனைவி உமா அதே பகுதியை சேர்ந்த விவேக் என்பவருடன் திடீரென மாயமாகினர். ஆத்திரமடைந்த அய்யனார் நேற்று முன்தினம்(அக்.3) இரவு திடீரென விவேக் வீட்டுக்கு முத்துச்சாமி (50), அவரது மனைவி பொன்மணி (42), பேரன் மாதேஷ் பாண்டியன் (6) ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார். இதில் சிறுவன் மாதேஷ் பாண்டி நேற்று(அக்.4) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ரேணுகா நேற்று (அக்.4) பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய கார்த்திகா கடந்த மாதம் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து புதிதாக ரேணுகா நியமிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் தனது பணியை துவக்கியுள்ளார். முன்னதாக இவர் மயிலாடுதுறை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பணியாற்றியுள்ளது குறுப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் போலி ID மூலம் வதந்திகள், தனி நபர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் தங்கள் பெயரில் உள்ள சமூக ஊடக கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என சமூக வலை தளங்களுக்கு உத்தரவிட வேண்டும். நாதக ஆதரவாளர்களின் அவதூறு பதிவுகளை நீக்கக்கோரி திருச்சி எஸ்.பி. வருண்குமார், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கில் அரசுத்தரப்பு வழக்கறிஞர் இவ்வாறு வாதம் முன் வைத்தனர்.
ஒன்றிய அரசின் “தேசிய நல்லாசிரியர் விருது” பெற்ற மதுரை, இலட்சுமிபுரம், டி.வி.எஸ் மேல்நிலைப் பள்ளியின் மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியர் நிலை-1 திரு. இரா.சே.முரளிதரன் அவர்கள் குடும்பத்தினருடன் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின் அவர்களை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து, விருதினை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
100 நாள் வேலை திட்டத்தை ஊராட்சித் தலைவர்கள் கொள்ளையடிக்கும் திட்டமாக பயன்படுத்துவதாகவும் மகாத்மா காந்தி பெயரை வைத்துக் கொண்டு முறைகேடு செய்வது வியப்பாக உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கரூர் அரவக்குறிச்சி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக தாக்கல் செய்த மனுவில் கரூர் மாவட்ட ஆட்சியர், ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி பதிலளிக்க உத்தரவு.
நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரத்தில் இருந்து மதுரை, ராஜபாளையம், புனலூர், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்க
தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயில் (06035) அக்டோபர் 11, 18, 25, நவம்பர் 1, 8, 15, 22, 29, டிசம்பர் 6, 13, 20, 27ஆகிய கிழமைகளில் இயக்கப்படுகிறது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நான்கு மாதத்திற்கு பின் புதிய முதல்வராக மதுரை அரசு மருத்துவமனையில் ENT மருத்துவராக பணியாற்றிய அருள் சுந்தரேஷ் குமார் நியமிக்கப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர் அருள் சுந்தரேஷ் குமார் இன்று (அக்.4) பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுள்ள அவருக்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.