Madurai

News October 6, 2024

தவறான தகவலை பரப்ப வேண்டாம் – கமிஷனர்

image

மதுரை மாநகர காவல் துறை வெளியிட்ட விளக்க குறிப்பில் மதுரை தல்லாகுளம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் பெண் காவலரை குடும்ப பிரச்சினையால் அவருடைய கணவர் தாக்கியதாக செய்திகள் பரவியது. கணவன் மனைவி இடையே வாக்குவாதத்தின் போது விளையாட்டாக கையால் அடித்ததை யாரோ செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளதால் அதை தவறாக பரப்ப வேண்டாம் என கேட்டக்கொண்டுள்ளது.

News October 6, 2024

மதுரையில் 35 இடங்களில் மழைமானி பொருத்தம்

image

மதுரை மாவட்டத்தில் புதிதாக 35 இடங்களில் மழை அளவை கணிக்கும் தானியங்கி மழை மானி நிறுவப்பட்டுள்ளது. 35 இடங்களிலும் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை மழை அளவுகளை https://beta-tnsmart.rimes.int/index.php /RTDAS/Hourly_data_TNDRRA_c/tndrra என்ற இணையதளத்தின் மூலமாக காணலாம் என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News October 6, 2024

மீனாட்சி அம்மன் கோவிலில் ஹன்சிகா மோத்வானி

image

உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ள நிலையில் திரைப்பட நடிகை ஹன்சிகா மோத்வானி தனது குடும்பத்துடன் வருகை தந்தார்.
நவராத்திரி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரக்கூடிய நிலையில் ஹன்சிகா மோத்வானி சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 6, 2024

மானியத்தில் நாட்டு கோழிக்குஞ்சுகள்

image

மதுரை ஆட்சியர் சங்கீதா கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் 2024-25-ம் ஆண்டில் ஏழ்மை நிலையில் உள்ள, கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு தலா 40 எண்ணிக்கையில் நாட்டு கோழிக்குஞ்சுகள் 50 சதவீத மானியத்தில் வழங்ப்படும். இத்திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய அளவில் தலா 100 பயனாளிகள் வீதம் மொத்தம் 1300 பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

News October 6, 2024

மத்திய நிதித்துறை செயலர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

image

மத்திய நிதி துறையின் கீழ் செயல்படும் கடன் வசூல் தீர்ப்பாயத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என மதுரை ஐகோர்ட் சாடியுள்ளது. தமிழகத்தில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தில் (DRT)காலியாக இருக்கும் விசாரணை அதிகாரி பணியிடங்கள் எத்தனை? ஏன் காலி பணியிடங்களை நிரப்பவில்லை? காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மத்திய நிதித்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு.

News October 6, 2024

ஊஞ்சல் அலங்காரத்தில் கோவர்த்தனாம்பிகை

image

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு ஆவுடைநாயகி சமேத சத்தியகிரீஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. விழாவில் மூன்றாம் நாளான இன்று (அக்.5) கோவர்த்தனாம்பிகை ஊஞ்சல் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து சிறப்பு ஆராதனையும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

News October 5, 2024

கள்ளழகர் கோயிலில் நாளை குடை விழா

image

அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோயிலில் நாளை (06/10/2024) பகல் 12.00 மணி அளவில் குடை விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் மூலவருக்கு புஷ்ஷுக்கு அலங்காரமும், உற்சவர் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள், உட்பிரகாரம் ஆண்டாள் சன்னதி முன்பு எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம் நடைபெறும். அதனை தொடர்ந்து தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார் என கோயில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

News October 5, 2024

சென்னை நாகர்கோவில் சிறப்பு ரயில் அறிவிப்பு

image

தென்னக ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நவராத்திரி விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் சிறப்பு ரயில் (06178) சென்னையிலிருந்து அக். 9 இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து அக்.10 இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும்.

News October 5, 2024

ரூ.1 கோடியில் அமையும் பிரம்மாண்ட மீன் மார்க்கெட்

image

மதுரை மாநகராட்சி சார்பில் ரூ.1 கோடியில் மீன் மார்க்கெட் கட்டப்படுகிறது. இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கரிமேட்டில் பழைய மீன் மார்க்கெட் இருந்த இடத்தில் அறிவியல் மையம் அமைவதால் மத்திய, மாநில மீன் வளத்துறை சார்பில் வழங்கப்படும் நிதி மூலம் ரூ.1 கோடியில் பிரம்மாண்டமான புதிய மீன் மார்க்கெட் கட்டப்பட உள்ளது. இதற்கான இடம் தேர்வு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News October 5, 2024

சென்னை – தூத்துக்குடி விடுமுறை கால சிறப்பு ரயில்

image

நவராத்திரி விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி சிறப்பு ரயில் (06186) அக்டோபர் 8 அன்று சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 01.50 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும்.

error: Content is protected !!