Madurai

News October 7, 2024

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை-விரைவில் தீர்ப்பு

image

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இறுதி சாட்சியாக சிபிஐ விசாரணை அதிகாரியான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த ஏடிஎஸ்பி விஜய்குமார் சுக்லா வரும் 16ஆம் தேதி ஆஜராகிறார். குற்றம் சாட்டப்பட்ட 9 பேரின் வழக்கறிஞர்கள் நீதிபதி முன்னிலையில் சுக்லாவிடம் குறுக்கு விசாரணை நடத்த உள்ளனர். இதனை தொடர்ந்து வழக்கின் தீர்ப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக கூறப்படுகிறது.

News October 7, 2024

மதுரை மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

image

மதுரை மாவட்டத்தில் Way2News நிறுவனத்தின் ‘மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ ஆக பணிபுரிய ஆட்களை தேர்வு செய்ய உள்ளோம். 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத ஊதியமாக ரூ.18,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 9965860996, 7806847823, 9791731249 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

News October 7, 2024

மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்த மதுரை

image

தீபாவளி பண்டிகையையொட்டி மதுரையின் முக்கிய கடை வீதிகள் நேற்று மக்கள் கூட்டத்தால் களைகட்டியது. மதுரை சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து மதுரைக்கு தீபாவளி பண்டிகைக்கு ஜவுளி வாங்க செல்வதால் ஜவுளிக்கடைகள் நிறைந்த பிரபல துணிக் கடைகள் அமைந்துள்ள கீழவாசல், விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, உள்ளிட்ட வீதிகளில் கட்டுக்கடங்கா மக்கள் கூட்டம் காணப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

News October 7, 2024

மாநில அளவில் கவிதை போட்டியில் பங்கேற்க அழைப்பு

image

மதுரை தியாகராஜர் கல்லூரியின் தமிழ் துறை சார்பாக கவிஞர் கண்ணதாசன் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான கவிதை போட்டி நடைபெற உள்ளது. “கண்ணதாசன் சுவடுகள் – மரபும் புதுமையும்” என்ற தலைப்பில் கவிதைகளை வரும் 10 ஆம் தேதிக்குள், தமிழ்த்துறைத தலைவர் தியாகராசர் கல்லூரி காமராசர் சாலை, தெப்பக்குளம் மதுரை – 625 009 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். முதல் பரிசு ரூ.5000 வழங்கப்பட உள்ளது.

News October 7, 2024

வெள்ளி வாகனமாக மாற்ற முடிவு

image

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி புறப்பாட்டில் பயன்படுத்தப்படும் மரத்தினாலான வாகனங்கள் வெள்ளி வாகனங்களாக மாற்றப்பட உள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா தெரிவித்தார். மரத்தினாலான அன்னம், சேஷம், பச்சைக்குதிரை, காமதேனு வாகனங்களை வெள்ளி வாகனங்களாக மாற்ற துறை அனுமதி பெற்று விரைவில் பணி துவங்க உள்ளதாகவும், கும்பாபிஷேக பணிகள் துவங்கும் முன் இப்பணிகள் நிறைவடையும் என்றார்.

News October 7, 2024

மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம்

image

மதுரை அமெரிக்கா கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம், தொழிற்பயிற்சிகள் வழங்கும் சிறப்பு முகாம் அக்.9 அன்று நடைபெற உள்ளது. இதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 87789 45248 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

News October 7, 2024

தமிழகம் அபரிமிதமான வளர்ச்சி – அமைச்சர்

image

ஐடி துறையில் இந்தியா, குறிப்பாக தமிழகம் அபரிமிதமான வளர்ச்சியை கண்டு வருகிறது என அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் நேற்று நடைபெற்ற “கனெக்ட் மதுரை 2024” நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், சீனாவில் இருந்து வெளிவரும் சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவுக்கு திரும்பி வருவதால் தமிழகத்துக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது ஆரம்பம்தான், எதிர்காலத்தில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.

News October 7, 2024

கல்வி சான்று மோசடியில் ஆர்.டி.ஒ உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு

image

மதுரை காமராஜா் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் முறைகேடாக தமிழ்வழிக் கல்விச் சான்றிதழ் பெற்று அரசுப் பணியில் சோ்ந்துள்ள வருவாய்க் கோட்டாட்சியா் கலைவாணி காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்திய மூத்தி, ஆட்சியரின் தனி உதவியாளா் சங்கீதா, வணிக வரி உதவி ஆணையா் சொப்னா, பல்கலைக்கழக அதிகாரிகள் உள்பட 9 போ் மீது நீதிமன்ற உத்தரவில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News October 7, 2024

மாட்டுவண்டி பந்தயத்தில் ரூ.1 லட்சத்தை வென்ற காளைகள்

image

மதுரை மாவட்டம் சுந்தரராஜன்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பெரிய மாட்டுவண்டி பிரிவில் நல்லாங்குடி கதி.முத்தையா சேர்வை, தெற்குப் பட்டி பிரேம் பிரதர்ஸ் அணி வெற்றி பெற்று ரூ.1 லட்சம் பரிசு தொகையை பெற்றது. 2 ஆம் இடத்தை கம்பம் PS சந்திரன் பிடித்து ரூ.75 ஆயிரமும் வென்றனர். பரிசுத்தொகை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கி பாராட்டினார்.

News October 6, 2024

தவறான தகவலை பரப்ப வேண்டாம் – கமிஷனர்

image

மதுரை மாநகர காவல் துறை வெளியிட்ட விளக்க குறிப்பில் மதுரை தல்லாகுளம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் பெண் காவலரை குடும்ப பிரச்சினையால் அவருடைய கணவர் தாக்கியதாக செய்திகள் பரவியது. கணவன் மனைவி இடையே வாக்குவாதத்தின் போது விளையாட்டாக கையால் அடித்ததை யாரோ செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளதால் அதை தவறாக பரப்ப வேண்டாம் என கேட்டக்கொண்டுள்ளது.

error: Content is protected !!