India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் ராஜ்குமார், இன்று(நவ.12) மதுரை விமான நிலையம் அருகே சென்ற போது, பைக்கில் வந்த ஆறுமுகம் என்பவர், தன் வண்டிக்கு வழிவிட கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, காவலர் ராஜ்குமாரை கத்தியால் குத்தியுள்ளார் ஆறுமுகம். ஆறுமுகத்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுப்பதற்கும், தாய்மார்கள் பாலூட்டுவதற்கும் ஓய்வறை பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. முதலாவது நடைமேடையில் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அனைத்து நடைமேடைகளிலும் பயணிகள் ஓய்வறை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
மதுரை சி.எம்.ஆர் சாலையில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் இன்று(நவ.12) காலை 11 மணிக்கு மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற இருந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மண்டலத்திற்கான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில், சுமார் ரூ.45 கோடி செலவில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகையின் போது மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டி இங்கு நடைபெற இருப்பதால், இதர சமயங்களில் மைதானத்தில் எந்த நிகழ்ச்சியும் நடைபெறுவதில்லை. எனவே,சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இங்கு பலூன் திருவிழா நடத்தப்படவுள்ளது. இதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ் தன்னார்வ சமூக பணியாளர்களாக தன்னார்வ அடிப்படையில் பணியாற்றிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ள நபர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய சுயவிவர அறிக்கையை வரும் 30 11,2024 ம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்திற்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அளிக்கலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகர் பகுதியில் இன்று (நவ.11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்களை மாநகராட்சி காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் இரவு நேரத்தில் குற்ற சம்பவங்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க இதில் குறிப்பிட்டுள்ள எண்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கார்த்திகை தீப உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் இரண்டாம் நாளான இன்று (11.11.2024) சுவாமிஅம்பாள் மரசப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்த சுவாமி அம்பாளை வழிநெடுகிலும் பக்தர்கள் வழிபட்டனர்.
சேடப்பட்டி ஒன்றியத்தில் கழக செயல் வீரர்கள் கூட்டத்தை முடித்துக் கொண்டு பேரையூர் செல்லும் போது, மங்கல்ரேவு அத்திப்பட்டு விலக்கு அருகே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், திமுக-வினரின் தூண்டுதலின் பேரில் சிலர் அதிமுக வினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கொலை வெறி தாக்குதலுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மதுரை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைகளில் அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். படிக்கும் வயதிலுள்ள சிறார்களை பள்ளிக்கு அனுப்புவது நமது கட்டாய பொறுப்பாகும். விதியை மீறி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைகளில் அமர்த்துவதை அறிந்தால் பொதுமக்கள் உடனே 83000-21100 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து சென்னைக்கு சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமானத்தில் தனது இருக்கையிலேயே தவற விட்டார். செல்போன் குறித்து ஞாபகத்திற்கு வந்தவுடன் உடனடியாக போலீசாரிடம் கூறிய நிலையில், சுமார் 40 நிமிடங்கள் கழித்து செல்போனை கண்டுபிடித்து ஓ.பி.எஸ்.சிடம் ஒப்படைத்தனர். இந்த நிகழ்வால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.