India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பேரையூர் அருகே 36 வயது பெண் ஒருவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்லையா(77), என்பவரிடம் மாடு வாங்குவதற்கு பணம் கேட்டுள்ளார். இதை பயன்படுத்தி அந்த பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, முதியவர் செல்லையா வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்து பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட முயற்சி செய்துள்ளார். உடனே அந்த பெண் வீட்டில் இருந்த விறகு கட்டையை எடுத்தவுடன், அங்கிருந்து தப்பிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்ட பகுதிகளுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 வரை காவல் அதிகாரிகளின் இரவு நேர ரோந்து விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஊமச்சிகுளம், சமயநல்லூர், பேரையூர், மேலூர், உசிலம்பட்டி.திருமங்கலம் போன்ற மதுரை மாவட்ட பகுதிகளுக்கு இரவு நேர ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விபரம் மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.
திமுக அரசின் நில எடுப்புப் பணியால் தமிழகமே போராட்ட களமாக மாறியுள்ளது என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு மக்களை இன்று வீதியில் நிறுத்தியுள்ளது. இதற்கு உரிய பதிலை, உரிய பாடத்தை வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் முதல்வர் ஸ்டாலினுக்குப் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மார்த்தாண்டம் மேம்பாலம் சந்திப்பு முதல் காந்தி மைதானம் வரை பாலத்தின்கீழ் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக தனியார் டாக்சி ஸ்டாண்ட் செயல்படுவதை தடை செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவில் குமரி மாவட்ட எஸ்பி, குழித்துறை நகராட்சி ஆணையாளர் பதில் மனு தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாக்சி டிரைவர்கள், மாணவிகள், பெண்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்குவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி பகுதியில் 5,000 ஏக்கர் பரப்பில் டங்ஸ்டன் கனிமம் எடுக்க மத்திய அரசு டெண்டர் விடுத்திருந்தது. இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எந்த அனுமதியும் வழங்கவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு எந்த விண்ணப்பமும் பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஓசூர் வழக்கறிஞர் நீதிமன்றம் முன்பாக பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வழக்கு விசாரணைக்கு வருபவர்கள் போலீசாரின் பலத்த சோதனைக்கு பின்பு நீதிமன்ற வளாகத்திற்குள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
மதுரை பீபிகுளம் கேந்திரிய வித்யாலயா பள்ளி மற்றும் உத்தங்குடி உட்பட நகரின் பல இடங்களில் ஆபத்தான முறையில் உள்ள பட்டுப்போன மரங்களை அகற்ற கோரி சந்திரபோஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 10 நாட்களில் அகற்றப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அகற்றியது குறித்து டிச.9 இல் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரையை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக தெற்கு மாவட்ட மாணவரணி தலைவர் ஆனந்த் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு கட்சியினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து இன்று காலை 6 மணிக்கு தூத்துக்குடி செல்லும் விமானத்தில் அமைச்சர் எவ. வேலு உட்பட 27 பயணிகள் பயணம் செய்தனர். தூத்துக்குடியில் தொடர்ச்சியாக பெய்யும் கனமழை காரணமாக 7.30 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானம் தரையிறங்க முடியாததால் 20 நிமிடங்கள் வானில் வட்டமடித்தது. பின்னர் 8 மணி அளவில் விமானம் மதுரையில் தரையிறக்கப்பட்டது. அமைச்சர் உட்பட 27 பயணிகளும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி விலங்குகளைப் பாதுகாக்க குழு அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், அனைத்து விலங்குகளையும் பாதுகாக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைப்பு.
Sorry, no posts matched your criteria.