India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா 05.12.2024 தேதி முதல் 14.12.2024 வரை பத்து நாட்கள் நடைபெறவுள்ளது. விழாவில் முக்கிய நிகழ்வுகளான பட்டாபிஷேகம் டிச.12 அன்று மாலை 6.30 மணி முதல் 7.30 மணிக்கும், டிச.13 அன்று திருத்தேரோட்டம், டிச.14 அன்று தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.
சிறு வணிகர்கள் நடத்தும் கடை வாடகைக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதை கண்டித்து தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் மற்றும் மதுரையில் உள்ள அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வரும் 29ஆம் தேதி முழுநேர கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அச்சங்கம் அறிவித்துள்ளது. எனவே கடையடைப்பு போராட்டத்தில் சிறு வணிகர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சிறப்பு குழு அமைத்து நேரடி ஆய்வுக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் மணிபாரதி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட், “மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள், தமிழக பொதும்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மதுரை , தேனி , திண்டுக்கல், விருதுநகர் , ராமநாதபுரம் ஆட்சியர்கள் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை விஸ்வநாதபுரம் திருவள்ளுவர் நகரில் ‘ஏர் கன்’ புல்லட் தாக்கியதில் காயமடைந்து விழுந்த ஆந்தையை ஊர்வனம் அமைப்பினர் மீட்டு தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த ஆந்தை தரையில் இறகொடிந்த நிலையில் கிடந்தது. மரத்தில் இருந்து விழுந்திருக்கலாம் என நினைத்து மருத்துவமனையில் சேர்த்த போது துப்பாக்கி குண்டு பாய்ந்து இறகில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மதுரை கள்ளிக்குடி அருகே திருமால் கிராமத்தில் செயல்படும் கல் குவாரியில் அரசு அனுமதிக்கப்பட்டுள்ள அளவைவிட அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக தாக்கல் செய்த மனுவில் மதுரை மாவட்ட ஆட்சியர் பரிசீலித்து 3 மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விதியை மீறும் கல் குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய கோரி கள்ளிக்குடி சிவசக்தி பாலன் தாக்கல் செய்த மனுவில் உத்தரவு.
மதுரையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் (நவ.23 &24) ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மதுரை மாவட்டத்தை பொருத்தவரை 10 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1165 வாக்குச்சாவடி மையங்களில் 2752 வாக்குச்சாவடிகளில் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளதால் வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. *பகிரவும்*
ஸ்பர்ஸ்’ என்ற அமைப்பின் மூலம் பாதுகாப்பு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீர்கள் (ராணுவம், கடற்படை, விமானப்படை) அவர்களை சார்ந்தோருக்கு ஓய்வூதிய குறைதீர் முகாம் மதுரை மடீட்சியா அரங்கில் இன்று(நவ.22) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. ஓய்வூதியர்களுக்கு வாழ்நாள் சான்று சமர்ப்பிப்பதில் ஏற்படும் இன்னல்கள், ஓய்வூதியம் சார்ந்த குறைகளை நிவர்த்தி செய்யலாம் என அழைப்பு.
கர்நாடக மாநில எல்லை பள்ளூர் பகுதி சாலையோரம் அரை நிர்வாணமாக ஒரு ஆண் சடலம் கிடந்துள்ளது. கர்நாடக மாநில அத்திப்பள்ளி போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மதுரையை சேர்ந்த அழகுராஜா (30) என்பது தெரியவந்தது. கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை, விஸ்வநாதபுரம் பகுதியில் ‘ஏர் கன்’ புல்லட் தாக்கியதில் காயமடைந்து விழுந்த ஆந்தையை நேற்று(நவ.21) ஊர்வனம் அமைப்பினர் மீட்டு தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையின்போது ஒரு பக்க இறகின் மீது ‘ஏர் கன்’ புல்லட் தாக்கிய அடையாளமும் காரீயகுண்டும் உள்ளே இருந்தது தெரியவந்தது. சிகிச்சையின் மூலம் ஆந்தை காப்பாற்றப்பட்ட நிலையில் ஏர் கன் மூலம் சுட்டவர் குறித்து போலீஸ் விசாரணை.
பேரையூர் அருகே 36 வயது பெண் ஒருவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்லையா(77), என்பவரிடம் மாடு வாங்குவதற்கு பணம் கேட்டுள்ளார். இதை பயன்படுத்தி அந்த பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, முதியவர் செல்லையா வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்து பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட முயற்சி செய்துள்ளார். உடனே அந்த பெண் வீட்டில் இருந்த விறகு கட்டையை எடுத்தவுடன், அங்கிருந்து தப்பிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.