India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டத்தில் இன்று (நவ.24) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளன.
மதுரை விளாங்குடி பகுதியில் வாட்ஸ்அப் குழு உருவாக்கி லாட்டரி விற்பனை நடப்பதாக போலீசார் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் விளாங்குடி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் 36, என்பவர் வாட்ஸ்அப் குழு அமைத்து சட்டவிரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து செல்போன் ரூ.11 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மதுரையில் மேம்பால பணிக்காக சிவகங்கை ரிங் ரோடு முதல் மேலமடை சிக்னல் வரை நவ.26 முதல் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. இன்று சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. கோமதிபுரம் 6வது தெரு வழியாக வண்டியூர் மக்கள் மற்றும் அப்பகுதியினர் கார்கள், ஆட்டோ டூவீலரில் செல்லலாம். மாட்டுத்தாவணி மார்க்கெட்டிலிருந்து வரும் வாகனங்கள் வைகை சர்வீஸ் ரோடு வழியாக செல்ல வேண்டும்
கடந்த நவ.14-ம் தேதி சோழவந்தான் அருகே தண்டவாளத்தில் இருந்து உடல் சிதைந்த நிலையில் ஒட்டன்சத்திரம் சக்தி கணேஷ் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து நடத்திய விசாரணையில் மது போதையில் அடிக்கடி மனைவி பரமேஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டு வந்த கணவரை மனைவி பரமேஸ்வரி மற்றும் அவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த கண்ணன் இருவரும் சேர்ந்து அடித்து கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் வீசியுள்ளனர். போலீசார் விசாரணை.
மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் நேற்று(நவ.23) வெளியிட்ட அறிக்கையில், செங்கோட்டை – மதுரை – தாம்பரம் வழித்தடத்தில் வாரம் மும்முறை இயங்கும் சிலம்பு விரைவு ரயில்களில் ( 20681/20682) விடுமுறை கால கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், வருகிற நவ.27ம் தேதி முதல் ஜனவரி 30ஆம் தேதி வரை கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட்டு 23 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் இன்று(23.11.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
மேலூர் நான்கு வழி சாலையில் உள்ள டெம்பிள் சிட்டி ஓட்டலில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 200 கிலோ கொண்ட பிரம்மாண்ட பிளம் கேக் தயாரிக்கும் பணி தொடங்கியது. அத்திப்பழம், பேரிச்சம்பழம், உலர் திராட்சை, பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட 200 கிலோ அளவிலான உலர் பழங்களை, உயர் ரக மதுபானங்கள் கொண்டு தயாரித்ததை, மாவட்ட ஓட்டல் சங்க தலைவர் டெம்பிள் சிட்டி குமார் பொதுமக்கள் பார்வைக்கு இன்று(நவ.23) வைத்தார்.
பண்டிகை கால விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க பயணிகளின் வசதிக்காக செங்கோட்டை – தாம்பரம் – செங்கோட்டை வாரம் மும்முறை சேவை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்களில் (20681/20682) கூடுதலாக ஆறு ரயில் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது. அதன்படி இந்த ரயில்களில் நவ.27 முதல் ஜனவரி 30 வரை கூடுதலாக ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது.
மதுரை மேலமடை சந்திப்பில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் பி.சி பெருங்காயம் சந்திப்பில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் மேலமடை சந்திப்பு நோக்கி வராமல் மாட்டுத்தாவணி அல்லது விரகனூர் சுற்றுச்சாலை வழியாக மாற்று வழித்தடத்தில் நகருக்குள் செல்லும் வகையில் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வரும் 24.11.2024 அன்று சோதனை முறையிலும், 26.11.2024 முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று (நவ.23) கிராம சபை கூட்டங்கள் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்
Sorry, no posts matched your criteria.