Madurai

News November 26, 2024

மதுரையில் மோசமான வானிலை: வட்டமடித்த விமானம்

image

மோசமான வானிலை காரணமாக மதுரையில் விமானம் ஒன்று வானில் வட்டமடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐதராபாத்தில் இருந்து இன்று(நவ.,26) மதுரை வந்த இண்டிகோ விமானம், மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல் வட்டமடித்த வண்ணம் இருந்தது. பின்னர் ஓடுபாதை சரியானதும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

News November 26, 2024

தல்லாகுளம் பெருமாள் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை

image

தல்லாகுளம் பிரச்சன்ன வெங்கடாஜலபதி கோயிலின் உண்டியல் நேற்று திறந்து எண்ணப்பட்டது. கோயில் துணை கமிஷசனர் செல்லத்துறை, கூடலழகர் கோயில் உதவி கமிசனர் லோகநாதன், இன்ஸ்பெக்டர் கர்ணவ், அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் பிரதீபா, அருட்செல்வன் ஊழியர்கள் பங்கேற்றனர். ரூ.7 லட்சத்து 88 ஆயிரத்து காணிக்கையாக கிடைக்கப் பெற்றது.

News November 26, 2024

தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு

image

ரயிலில் பயணம் செய்ய மாற்றுத்திறனாளிகளுக்கு 75 % கட்டண சலுகை பெறும் நடைமுறைகளை எளிதாக்கி மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திலிருந்தே அடையாள அட்டை பெற புதிய இணையதள வசதியை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்துகிறது. தேவையான சான்றிதழ்களைhttps://divyangjanid.indianrail.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். உரிய பரிசீலனைக்கு பிறகு அடையாள அட்டையும் இணையதளம் மூலமே வழங்கப்படும்.

News November 25, 2024

மதுரை இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாநகர் பகுதியில் இன்று(நவ.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்களை மாநகராட்சி காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் இரவு நேரத்தில் குற்ற சம்பவங்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க இதில் குறிப்பிட்டுள்ள எண்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 25, 2024

மதுரையில் பொதுமக்கள் குறைதீர் முகாம் அறிவிப்பு 

image

மதுரை மாவட்டம், மதுரைதெற்கு வட்டத்தில் நவ.27ஆம் தேதியன்று உங்களைத்தேடிஉங்கள் ஊர் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்முகாம் மற்றும் தெற்குவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வுப்பணிகள் நடைபெறவுள்ளது. எனவே  தெற்குவட்டத்திற்குட்பட்ட அனைத்து பொதுமக்களும் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளித்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். *பகிரவும்*

News November 25, 2024

மதுரை மண்டல கூட்டுறவுத்துறை இணைபதிவாளர் பதவியேற்பு

image

மதுரை மண்டலத்தின் கூட்டுறவுத்துறையின் இணை பதிவாளராக பணியாற்றிய குருமூர்த்தி பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய இணை பதிவாளராக சதீஷ்குமார் நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று(நவ.25) சதீஷ்குமார் மதுரை மாடக்குளம் பகுதியில் இருக்கக்கூடிய இணை பதிவாளர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.

News November 25, 2024

மேலூரில் 10000 பேருக்கு மட்டன் பிரியாணி விருந்து

image

மதுரை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 47வது பிறந்த நாளை ஒட்டி மேலூர் நகர்மன்ற உறுப்பினர் ரிஷி ஏற்பாட்டில் 10000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் லெக் பீஸ், முட்டை, தயிர்சாதத்துடன் அசைவ அன்னதான விருந்து வழங்கப்பட்டது. இதனை தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்த நிலையில் இந்த அசைவ அன்னதான விருந்தில் மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News November 25, 2024

மரணத்தில் முடிந்த மாதவிடாய் பிரச்சனை!

image

மதுரை கோ.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரதா 39. இவருக்கு மாதவிடாயின் போது தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. தொடர்ந்து சிகிச்சை பெற்றும் வயிற்று வலி சரியாகாததால் மன உளைச்சலடைந்த ஜெயப்பிரதா நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உடலை மீட்ட கோ.புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 25, 2024

மதுரையில் நாளை கரண்ட் கட்

image

மதுரை மாவட்டத்தில் மின் சம்பந்தமான மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை ஏற்படும். கீழையூர்,அட்டப்பட்டி, கொடுக்கம்பட்டி,கீழவமளவு,செம்மினிபட்டி, கொங்கம்பட்டி, முத்துச்சாமிபட்டி,தனியாமங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயக்கம்பட்டி, உறங்கான்பட்டி,சருகுவலையபட்டி, இ.மலம்பட்டி, கரையிப்பட்டி, கோட்டநத்தாம்பட்டி, வெள்ளலூர், தர்மதானபட்டி, பெருமாள்பட்டி உள்ளிட்ட இடங்களில் நாளை மின்தடை ஏற்படும்.

News November 24, 2024

தடையை மீறி தீபம் ஏற்றியவர்களுக்கு ஜாமின்

image

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் தடையை மீறி கார்த்திகை ஜோதி தீபம் ஏற்றியதாக கடந்த வாரம் இந்து முன்னணி நிர்வாகிகள் 8 பேர் திருப்பரங்குன்றம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கைதான 8 பேரும் ஜாமினில் இன்று வெளிவந்தனர். அவர்களுக்கு பாஜகவினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

error: Content is protected !!