India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை பயிற்சி டாக்டர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் சூப்பர் ஸ்பெஷலிட்டி மருத்துவ மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதாந்திர உதவித் தொகை விவரங்கள், மதுரை மருத்துவ கல்லூரியால் தற்போது வரை தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, மதுரை மருத்துவ கல்லூரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்று விளக்கம் கேட்டு தேசிய மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திண்டுக்கல் திருச்சி இடையேயான ரயில்வே பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் வண்டி எண் 16848 செங்கோட்டை- மயிலாடுதுறை செல்லும் விரைவு ரயில் இன்று வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ரயில் மதுரை, கொடைரோடு ரயில் நிலையத்தில் வராமல் மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி சென்றடைந்து மயிலாடுதுறை செல்லும் என அறிவிப்பு இதனால் பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் இன்று (டிச.2) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியீடப்பட்டுள்ளது. இதில் பேரையூர், ஊமச்சிகுளம், திருமங்கலம், மேலூர், சமயநல்லூர், உசிலம்பட்டி போன்ற மதுரை மாநகர பகுதிகளுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து காவல்துறை அதிகாரிகளின் விவரம் மதுரை மாநகர காவல் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறைகள் அடங்கிய மனுக்களுடன் வந்த பொதுமக்கள் தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டார். இன்று ஒரே நாளில் மட்டும் 650 மனுக்கள் பெறப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கார், பைக் போன்ற பரிசுகள் வழங்குவதை தவிர்த்து, விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளை வழங்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் மானகிரி செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ‘மனுதாரர் கோரிக்கை தொடர்பாக அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
மதுரை: ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் விழுப்புரத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மதுரை தல்லாகுளம் செக்போஸ்ட் அருகே மனமகிழ் மன்றத்தில் சட்டத்துக்கு புறம்பாக பணம் வைத்து, சூதாடுவதாக கிடைத்த தகவல் அடுத்து இன்று தல்லாகுளம் போலீசார் அங்கு சென்று, அரசன், நாகராஜன், கிருபாகரன், விஜயபாலாஜி உட்பட 15 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 செல்போன்கள், டோக்கன்கள் மற்றும் சீட்டு கட்டுகள் ரொக்கம் ரூ. 14 ஆயிரத்து 910 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை : பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் இன்று பிற்பகல் தனது எக்ஸ் தளத்தில், ” சென்னை – விழுப்புரம் ரயில்வே வழித்தடம் விரைவில் சரி செய்யப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றிரவு சென்னையில் இருந்து புறப்பட்டு ரயில்கள் ரத்தாக வாய்ப்பு இல்லை, புறப்படும் நேரத்தில் சிறிது மாற்றம் இருக்கலாம் எனவும் கூறியுள்ளனர் ” என்று பதிவிட்டுள்ளார்.
இன்று (டிச. 2) மற்றும் டிச. 3, 5, 6, 8ல் காலை 7:00 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் இன்டர்சிட்டி ரயில் (16722) போத்தனுார் ஸ்டேஷன் வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கத்தில் இன்டர்சிட்டி ரயில் (16721)டிச. 3, 5, 6, 8ல் மதியம் 2:45 மணிக்கு போத்தனுாரில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு இரவு 7:35 மணிக்கு வரும்.போத்தனுார் – கோவை இடையே இவ்விரு ரயில்களும்பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.
மதுரை : அரிட்டாபட்டியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், டிசம்பர் 9 & 10 தேதிகளில் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும், சட்டப் பேரவை கூட்டத் தொடரில், மதுரையில் அமைக்க திட்டமிடப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.