India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என இந்திய விமான நிலையங்களின் ஆணையத் தலைவர் எம். சுரேஷ், (அக்.1) அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் முதற்கட்டமாக வரும் டிசம்பர் 20ஆம் தேதி முதல் இரவு நேரத்தில் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படும் என இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.
மதுரை அழகர் கோவிலில் பக்தர்களுக்கு மதியம் ஒரு வேளை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை தமிழ்நாடு சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது இவ்வாண்டு முதல் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் அழகர் கோவில் விரிவுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது திட்டத்தை செயல்படுத்த அழகர் கோவில் நிர்வாகம் சார்பில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. காலை 10மணி முதல் இரவு 8 மணிவரை அன்னதானம் வழங்க உள்ளது.
மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரும் 11.12.2022 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள் மற்றும் இதர கோரிக்கைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0452-2529695 இல் தொடர்பு கொள்ளலாம்.
கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை சென்று சாமி தரிசனம் செய்வதும், கிரிவலம் செல்வதும் வழக்கம். பக்தர்களின் வசதிக்காக, மதுரை கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கார்த்திகை தீப திருவிழாவிற்காக வருகிற 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 300 சிறப்பு பஸ்கள் இயக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மதுரை அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மதுரை பல்கலை பிஎச்டி மாணவி, பிஎச்டி வழிகாட்டியாக இருந்த பேராசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக, கூறிய புகாரின் பேரில், பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.
இதனை உயர் நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி ரத்து செய்தார்.
தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், ” தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்ததுடன், கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுள்ளதில் தவறில்லை” என்றும் உத்தரவிட்டனர்.
மதுரை மாநகரில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து காவல் பிரிவு, ஆயுதப்படை மற்றும் சிறப்பு படையில் 15 ஆண்டுகள் பணிபுரிந்த 11 முதல் நிலை காவலர்கள், தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்றனர். பதவி உயர்வு பெற்றவர்களை, மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் இன்று நேரில் வரவழைத்து நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
மதுரை மாநகர் பகுதியில் இன்று(டிச.6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்களை மாநகராட்சி காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் இரவு நேரத்தில் குற்ற சம்பவங்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க இதில் குறிப்பிட்டுள்ள எண்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் இளைஞர் ஒருவர் தனக்கு வேலை தேவை என போஸ்டரை ஒட்டியுள்ளார். அதில் பெயர் பாலாஜி, வயது கல்யாண வயது, படிப்பு வேலைக்கு தேவையான அளவு, முன் அனுபவம் இருக்கு, சம்பளம் உங்களால் முடிந்தது, நான் உங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கணும் நினைக்கிறீர்களா என்று கூறி தனது ஜிமெயில் ஐடியையும் பதிவிட்டு இருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
தென்னக ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இணை ரயில் தாமதமாக வருவதால் மதுரையில் இருந்து இன்று (டிச.6) இரவு 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – கான்பூர் சென்ட்ரல் பண்டிகை கால சிறப்பு ரயில் (01928) சனிக்கிழமை (டிச.7) மதியம் 02.00 மணிக்கு 14 மணி 25 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு ஏற்ப பயணிகள் பயண திட்டத்தை வகுத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரையூர் அருகே சாப்டூர் வி.அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(39). இவரிடம் ஒரு லட்சம் கொடுத்தால் பல லட்சம் ரூபாய் வெளிநாட்டு டிரஸ்ட் மூலமாக பெற்றுத் தருவோம் என பாலாஜி, மணிராஜா, செல்வம் ஆகியோர் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து ரூ. 11 லட்சத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். பின் 3 நபர்களும் தலைமறைவாகி விட்டனர். புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் இன்று விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.