Madurai

News December 10, 2024

சத்திரபட்டி வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம் 

image

வெளிச்சநத்தம் விசிக கொடிகம்ப விவகாரம் விடுதலை சிறுத்தைகள் கொடிக்கம்பம் ஏற்றியது தொடர்பாக வருவாய் ஆய்வாளர் அனிதா பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு. ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பாக கிராம உதவியாளர் பழியாண்டி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பரமசிவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

News December 10, 2024

மதுரை மாவட்ட பகல் ரோந்து பணி காவலர்கள் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்ட பகல் ரோந்து பணி இன்று(டிச.10) காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களும் வெளியீடு. பேரையூர் ஊமச்சிகுளம் திருமங்கலம் மேலூர் சமயநல்லூர் உசிலம்பட்டி போன்ற மதுரை மாநகர பகுதிகளுக்கு பகல் 2 மணி முதல் மாலை 5மணி வரை பகல் ரோந்து காவல்துறை அதிகாரிகளின் விவரம் மதுரை மாநகர காவல் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டது.

News December 10, 2024

மதுரை விசிக விவகாரம்-கிராம உதவியாளர் சஸ்பெண்ட்

image

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெளிச்சநத்தம் பகுதியில் 25 அடி உயர கொடிக்கம்பம் 45 அடி உயரத் கொடிக்கம்பம் மாற்றப்பட்டதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்திருந்தது. இந்நிலையில் விசிக கொடி கம்பத்தை உயர்த்துவதற்கு அனுமதி வழங்கியது தொடர்பாக கிராம உதவியாளர் பழனி ஆண்டியை பணியிடை நீக்கம் செய்து மதுரை வடக்கு தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.

News December 10, 2024

சுதந்திர போராட்ட தியாகி பெ.கட்டசாமி மறைவு!

image

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவு அருகே கண்மாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி பெ.கட்டசாமி நேற்று (டிச.09) இரவு காலமானார். இவரது ஓய்வூதிய எண் SFF 14083 என்பது குறிப்பிடத்தக்கது. 1942 ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இவரும் கலந்து கொண்டார். அலிபுரம் பெல்லாவி சிறையில் ஆறு மாதத்திற்கும் மேலாக அடைக்கப்பட்டு விடுதலை பெற்றார்.

News December 10, 2024

மதுரையில் வேலை வாய்ப்பு முகாம்

image

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் டிசம்பர் 14-ஆம் தேதி மதுரை தல்லாகுளம் சமூக அறிவியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்கின்றனர்.

News December 10, 2024

மதுரை சாலைகளில் அதி நவீன காமிராக்கள்

image

மதுரை போக்குவரத்து துணை கமிஷனர் வனிதா திங்கட்கிழமை பேசுகையில், ”சென்னை, கோவையை போல மதுரையிலும் ஏஎன்பிஆர் காமிராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அதி நவீன காமிராக்களை, எம்ஜிஆர் சிலையில் துவங்கி மாட்டுத்தாவணி மெயின் ரோட்டிலும், சிம்மக்கல், காளவாசல் பகுதியிலும் விரைவில் பொருத்தப்பட உள்ளது. இந்த நடைமுறை பயன்பாட்டுக்கு வந்தால் விபத்துக்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைய வாய்ப்புள்ளது ” என்றார்.

News December 10, 2024

சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

image

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி மகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டுக்காக வருகிற 13-ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர். பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

News December 9, 2024

மதுரை மக்களுக்கு அதிமுக துரோகம் செய்தது: மு.க ஸ்டாலின்

image

மதுரை டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,“மதுரை மக்களுக்கு அதிமுக செய்த துரோகங்களுக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி; டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலம் விடும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு கொடுக்க காரணமான சட்டதிருத்ததை அதிமுக ஆதரித்தது; திமுக எதிர்த்தது; எதிர்க்க வேண்டிய இடத்தில் ஆதரித்து விட்டு இங்கே நாடகமாடுவது எடுபடாது” என குறிப்பிட்டுள்ளார்.

News December 9, 2024

4 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய ஆட்சியர் முடிவா?

image

மதுரை வெளிச்சநத்தம் கிராமத்தில் சமீபத்தில் அரசின் அனுமதியின்றி 45 அடி உயரத்தில் கொடி கம்பம் நட்டு, பின் தற்காலிக அனுமதியுடன் கொடியேற்றினர். இந்த விவகாரம் தொடர்பாக முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்காத 4 வருவாய் அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பணி இடைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. இதனால் வருவாய் அலுவலர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

News December 9, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (09.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உள்ளூர் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!