Krishnagiri

News August 23, 2024

பள்ளிகளில் அனுமதியின்றி முகாம் நடத்துவதற்கு தடை

image

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு பிறகு தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இனிமேல் தமிழகத்தில் உள்ள அரசு அல்லது தனியார் பள்ளிகளில் முன் அனுமதியின்றி எந்தவிதமான முகாம்களும் நடத்தக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அனுமதியின்றி முகாம் நடத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

News August 23, 2024

சிங்காரப்பேட்டை அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி

image

சிங்காரப்பேட்டை அருகே திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இன்னோவா மற்றும் பிக்கப் வேன் இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தாய் மகன் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். உறவினர் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்று வீடு திரும்பும் போது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

News August 23, 2024

தேன்கனிக்கோட்டையில் வயலுக்குள் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு

image

தேன்கனிக்கோட்டையை சேர்ந்த வெங்கடாசலபதி (51) விவசாயி. இவர் நேற்று காலை வயலில் ஏர் கலப்பை பொருத்திய டிராக்டரை ஓட்டிக்கொண்டு வயலுக்கு சென்றார். அங்கு நிலத்தை உழுது முடித்து விட்டு வயலில் இருந்து வெளியில் ஓட்டி வர வரப்பில் ஏற முயன்ற போது டிராக்டர் நிலை தடுமாறி வயலுக்குள் கவிழ்ந்தது. இதில் டிராக்டரின் அடியில் சிக்கிய வெங்கடாசலபதி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News August 23, 2024

கிருஷ்ணகிரி வழக்கில் கைதான சிவராமன் உயிரிழப்பு

image

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சிவராமன் உயிரிழந்துள்ளார். இவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு கிருஷ்ணகிரி மருத்துவனையில் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது தற்கொலைக்கு முயற்சித்து எலி மருந்து சாப்பிட்டார். இதனால், சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News August 23, 2024

கிருஷ்ணகிரி சாலை விபத்துகளில் இதுவரை 425 பேர் பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் நடந்த சாலை விபத்துகளில் 425 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1060 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதன் படி ஜனவரி மாதம் 69 பேரும், பிப்ரவரி மாதம் 62 பேரும், மார்ச் மாதம் 60 பேரும், ஜூன் 65 மற்றும் ஜூலை மாதம் 52 பேரும் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவர்கள் ஹெல்மட் அணியாமல் சென்றவர்கள் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

News August 23, 2024

கிருஷ்ணகிரியில் தமிழக அரசு விருது பெற்ற கால்நடை மருத்துவர் தற்கொலை

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அபார்ட்மெண்டில் தனியாக வசித்து வந்த பிரபல வன கால்நடை மருத்துவரான பிரகாஷ்( 40 ) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் நெல்லையில் மகளுடன் வசிக்கும் தனது மனைவி கவிதாவிடம், தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக போனில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தற்கொலை செய்துகொண்ட பிரகாஷ், தமிழக அரசு சார்பில் துணிச்சலான பணிக்காக விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 22, 2024

கிருஷ்ணகிரியில் வன்கொடுமை குறித்து அதிகாரிகள் ஆலோசனை

image

பர்கூர் தனியார் பள்ளி பயிற்சி முகாமில், பள்ளி மாணவிகள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுப்பது குறித்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், காவல்துறை தலைவர் பவானீஸ்வரி, சமூக பாதுகாப்பு ஆணையர் ஜானி டாம் வர்கீஸ், மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு, எஸ்பி தங்கதுரை ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

News August 22, 2024

கிருஷ்ணகிரி மாணவர்கள் கணத்திற்கு

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் அடுத்த நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டுப் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் அதற்கான முன்பதிவுகள் 25.8.2024 அன்று முடிவடைய உள்ளது. இதுவரை முன்பதிவு செய்யாதவர்கள் https://sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில் கபடி, சிலம்பம், குத்துச்சண்டை, உள்ளிட்ட 23 வகையான விளையாட்டுகள் நடைபெறவுள்ளன.

News August 22, 2024

கிருஷ்ணகிரியில் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகாரளிக்கலாம்

image

கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி முகாமில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகள் இன்று மாலை 7 மணியளவில் சமுக நலத்துறை அதிகாரியிடம் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கிருஷ்ணகிரி சுற்றுலா மாளிகையில் புகார் தெரிவிக்க சமுக நலத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

News August 22, 2024

சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு

image

பருகூர் அருகே தனியார் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் போலியாக என்சிசி முகாம் நடத்தி 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை சிவராமன் மீது இரண்டு போக்சோ வழக்குகள் மாற்றும் ஒரு மோசடி வழக்கு பதிவாகியுள்ளது.

error: Content is protected !!