Krishnagiri

News October 23, 2024

பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த நபருக்கு ஆயுள் தண்டனை

image

ஊத்தங்கரை அண்ணா நகரை சேர்ந்த இராமாயி (40), சிவக்குமார் (30) ஆகிய இருவரும் ஊத்தங்கரை நேருநகரில் திருமணம் செய்துகொள்ளாமல் 8 வருட காலம் குடும்பம் நடத்தி நடத்தி வந்துள்ளார். இராமாயின் நடத்தையில் சந்தேகப்பட்டு சிவகுமார் 18.05.2018-ம் தேதி இராமாயி என்பவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த வழக்கில் நேற்று மகிளா கோர்ட் சிவக்குமாருக்கு ஆயுள்தண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது.

News October 23, 2024

கிருஷ்ணகிரி  சீர்மரபினருக்கு ஆட்சியர் அறிவிப்பு 

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் விபத்து, இயற்கை மரணம், ஈமச்சடங்கு, கல்வி மருத்துவம், ஓய்வூதியம், திருமணம் ஆகியவற்றிற்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் 24.10.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண் 11-ல் நடத்தப்பட உள்ளது. எனவே தகுதி உள்ளவர்கள் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு அறிவித்துள்ளார். 

News October 23, 2024

30-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நிறைவு விழா

image

கிருஷ்ணகிரியில் 30-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நிறைவு விழா நடந்தது. இதில் சிறந்த அரங்குகள் அமைத்த அரசுத்துறை அலுவலர்கள், மா உற்பத்தியாளர்கள் உள்பட 79 பேருக்கு கலெக்டர் பரிசு, சான்றிதழ்கள் வழங்கினார். இந்த கண்காட்சியில் சிறந்த அரங்கிற்கான முதல் பரிசு தோட்டக்கலைத்துறைக்கும், 2-ம் பரிசு கிருஷ்ணகிரி நகராட்சிக்கும், 3-ம் பரிசு காவல் துறைக்கும் வழங்கப்பட்டது.

News October 23, 2024

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை பதிவு

image

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் புகார்களை தெரிவிக்க 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பாக நேற்று (22/10/2024) சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் குழந்தை திருமணத்தை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செய்வது மிகவும் குற்றம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

News October 23, 2024

வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பையை மற்றும் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வென்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ ,மாணவிகளை பதட்டங்களை காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

News October 23, 2024

இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளின் நிலவரம்.

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 22.10.2024 இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 22, 2024

மாங்கனி கண்காட்சியை 1.50 லட்சம் பேர் தகவல்

image

கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் 30வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு ஆட்சியர் சரயு தலைமை வகித்து சிறந்தஅரங்குகள் அமைத்த அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட 79 பேருக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கிய ஆட்சியர் அகில இந்திய மாங்கனி கண்காட்சி கடந்த செப்டம்பர் 13ம் தேதி தொடங்கி நேற்று வரை 39 நாட்களில் 1.50 லட்சம் பேர் கண்காட்சியை பார்வையிட்டதாக தெரிவித்தார்.

News October 22, 2024

கிருஷ்ணகிரி மாணவர்களே உஷார்!

image

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவர் பல்கலைக்கழகத்தின் லோகோவை பயன்படுத்தி போலி இணையதளம் செயல்படுவதாகவும், மாணவர் சேர்க்கைக்கு ரூ.25 லட்சம் செலுத்த கோரி 2 பேருக்கு போலி ஆணை அனுப்பியதாகவும், போலியான இணையதள முகவரி நம்பி ஏமாற வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கே.எம் சரயு அறிவித்துள்ளார்.

News October 22, 2024

கிருஷ்ணகிரிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் நீர்வரத்தானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையிலிருந்து தென்பெண்னை ஆற்றில் 4290 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்க கூடிய கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

News October 22, 2024

4.45 லட்சம் குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கல்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 4.45 லட்சம் குடும்பங்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மொத்த காப்பீடு திட்டம் முன்னாள் முதல்வர் கருணாநிதி  (23.7.2009) அன்று தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் பல்வேறு நபர்கள் பயனடைந்து வருகின்றனர்.

error: Content is protected !!