India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாகலூரில் ரூ.1 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சரயு, ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினர் பிரகாஷ், மாநகராட்சி மேயர் சத்யா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் எல்லோரா மணி, முன்னாள் பாகலூர் ஊராட்சி மன்றத் தலைவர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை சாலையில் வாக்கில் உள்ளே அவுட் பகுதிக்கு செல்லும் இடத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக சிலர் வாடகைக்கு பயன்படும் வகையில் வீடுகளை கட்டி வருவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு கட்டப்பட்டிருந்த 15 வீடுகளை வருவாய்த்துறையினர் ஜேசிபி வாகனங்கள் உதவியுடன் இடித்து அகற்றினர். அப்போது ஓசூர் போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை 9.11.2024 காலை பத்து மணி முதல் ஒரு மணி வரை அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்களிடம் தங்களது ரேஷன் அட்டையில் பெயர் நீக்கல், சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டான கோரிக்கைகள் சம்பந்தமாக மனு அளித்து தங்களது கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நவ 9ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. முகாமில் 8 ஆம் வகுப்பு மற்றும் அதற்குமேல் கல்வி பயின்ற மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, தனித்துவம் மிக்க அடையாள அட்டை, ஆதாா் அட்டை, கல்விச் சான்றுகள், புகைப்படம், சுய விவரம் ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் முதல்வர் மருந்தகம் அமைக்கலாம் இதற்கு www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் நவம்பர் 20வரை விண்ணப்பிக்கலாம். இதில், ரூ.1.50 லட்சம் மதிப்பிற்கு மருந்துகளாகவும் விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் பொருட்டு, நவம்பர் 9ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஊத்தங்கரை, அஞ்செட்டி, ஓசூர், சூளகிரி உள்ளிட்ட 8 வட்டங்களில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் குடும்ப அட்டை தொடர்பான பிரச்சனைகள், பொது விநியோக திட்டம் தொடர்பான குறைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை மக்கள் நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம்.
தமிழ்நாடு அரசு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 01.11.2024 அன்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளித்தது. தீபாவளி பண்டிகை 31.10.2024 அன்று கொண்டாடப்பட்டதால், அரசு ஊழியர்கள் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 09.11.2024 அன்று பணி நாளாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் செயல்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒசூர் அடுத்த மாயநாக்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நாகராஜ்(48) – ரத்னம்மா(37) தம்பதி மற்றும் அவரின் மகன் நவீன்(10) ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் தளி- கனகபுரா சாலை அடர்வனப்பகுதியான ஆன்னேமார்தொட்டி என்னும் வளைவு பகுதியில் நிலைத்தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து பாறையில் மீது விழுந்ததில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குடும்பமே விபத்தில் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் திமுக சட்டப்பேரவை தொகுதி வாரியாக முகவர்கள், தொகுதி பார்வையாளர்கள் அறிமுகம், ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஓசூர் தொகுதி பார்வையாளர் வடிவேலு, முன்னாள் எம்எல்ஏ முருகன், மேயர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மா. செயலாளர் பேசுகையில் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என கூறினார்.
கிருஷ்ணகிரியில் முன்னாள் படைவீரர்கள் நலத் துறை சார்பாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்களுக்கான ஓய்வூதிய குறைதீர் முகாமை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர் தங்கள் ஓய்வூதியம் தொடர்பான குறைகளை 8807380165 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.