Krishnagiri

News November 13, 2024

தமிழ்நாடு சாலை ஆய்வாளர்கள் சங்க கூட்டம்

image

ராயக்கோட்டையில் தமிழ்நாடு சாலை ஆய்வாளர்கள் சங்க கூட்டம் மாவட்ட செயலாளர் வினோத் தலைமையில் நடந்தது. மாநில செயலாளர் தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுக்குழு வரும் டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அனைத்து கோட்ட, உட்கோட்ட நிர்வாகிகள், அனைத்து உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

News November 13, 2024

கிருஷ்ணகிரி அருகே வெட்டி வீசப்பட்ட பெண்ணின் உடல்

image

திருவண்ணாமலையை சேர்ந்த கோபி(34), மனைவி சரண்யா(29) என்பவரை குடும்ப தகராறு காரணமாக கொன்று கிருஷ்ணகிரி அருகே வீசிச்சென்றது தொடர்பாக திருவண்ணாமலை போலீசார் குருபரப்பள்ளி போலீசார் உதவியுடன் மேலுமலை வனப்பகுதியில் சரண்யாவின் உடலை தேடினர். அங்கு அவரது உடல் பாகங்களை 5 நெகிழிப் பைகளில் அழுகிய நிலையில் கைப்பற்றிய போலீசார் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

News November 12, 2024

எடப்பாடி வருகை குறித்து ஆலோசனை கூட்டம்

image

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், நாளை மறுநாள் 14-ம் தேதி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு வருகை தரும் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சப்பாணிப்பட்டியில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News November 12, 2024

சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் திட்டம்

image

கலைஞர் கடன்திட்டம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ், தமிழ்நாடு தொழிலாளர் கூட்டுறவு வங்கி (தாய்கோவங்கி) கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு 7% வட்டியில் ரூ.20 லட்சம் வரையிலான கடன் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பிற நிறுவனங்களிலுள்ள இருந்து பெற்ற அதிக வட்டி கடன்களை மாற்றிக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தாய்கோ வங்கி கிளைகளை அணுகலாம்.

News November 12, 2024

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை 

image

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்துள்ள படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான விண்ணப்பத்தை www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தை நவ 30ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கௌரிசங்கர் தெரிவித்துள்ளார்.

News November 11, 2024

தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் .கே.எம்.சரயு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பொதுமக்கள் தங்களின் பல்வேறு குறைகளை முன்வைத்தனர். வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகைகள், சாலை வசதி போன்ற முக்கிய கோரிக்கைகள் மனுக்களில் அதிகமாக இருந்தன. மாவட்ட ஆட்சியர், தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

News November 11, 2024

சாலையை கடக்க முயன்றவர் தனியார் பேருந்து மோதி பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளக்குட்டை பகுதியில் உறவினர் வீட்டிற்கு சென்ற நபர் சாலையை கடக்கும் போது செங்கம் நோக்கி சென்ற தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். உடலை கைப்பற்றிய சிங்காரப்பேட்டை போலீசார் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது. 

News November 11, 2024

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தந்தை மகன் பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் இடைப்பையூரைச் சோ்ந்தவர் ராஜா (50). இவரது மகன் மகேந்திரன் (15). இவர் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இருவரும் காவேரிப்பட்டினத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது பையூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து காவேரிப்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 11, 2024

கிருஷ்ணகிரியில் 14,081 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 14 ஆயிரத்து 81 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் 1 லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்து 2021-ம் ஆண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். ரூ.3,025 கோடி மதிப்பில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டது.

News November 10, 2024

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் வரலாறு

image

தென்பெண்னை நீரை கரையோர விவசாய மக்கள் மட்டுமே ஏற்றம் முலம் எடுத்து விவசாயம் செய்தனர். மற்ற பகுதி மக்கள் நீரின்றி வறட்சியால் தவித்தனர். அதை மாற்ற அப்போதைய காவேரிப்பட்டணம் எம்.எல்.ஏ சு. நாகராஜ மணியகாரர் ஆற்றின் குறுக்கே அணை கட்ட அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதன்படி, முதல்வர் காமராஜர், ராஜாஜியின் ஆலோசனைப்படி அணை கட்ட சம்மத்தித்தார். அணை கட்டும் பணி 1955ல் தொடங்கி 1957 நவ 10 ஆம் தேதி திறக்கப்பட்டது.

error: Content is protected !!