Krishnagiri

News May 8, 2024

கிருஷ்ணகிரி: அதிமுக ஆலோசனை கூட்டம்

image

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் என்னும் மையத்திற்கான அதிமுக முகவர் பொறுப்பாளர்களை நியமிப்பது மற்றும் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக துணை பொதுச் செயலாளர் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஆலோசனை வழங்கினார். அதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News May 8, 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்நாடகா ஆளுநர்

image

பெங்களூரிலிருந்து சாலை மார்க்கமாக வேலூர் செல்லும் வழியில், கிருஷ்ணகிரி பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு வருகை புரிந்த மாண்புமிகு கர்நாடக ஆளுநர் திரு. தவார் சந்த் கெலாட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் இன்று 08.05.2024 மலர் கொத்து வழங்கி வரவேற்றார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. தங்கதுரை உள்ளார்.

News May 8, 2024

சிறப்பு வகுப்புகள் நடத்த தடை

image

தனியார் பள்ளிகள் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை கால சிறப்பு வகுப்புகளை நடத்தி வந்தது. வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதை கவனத்தில் கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதை வரவேற்று பெற்றோர் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர்.

News May 8, 2024

கிருஷ்ணகிரி: மழையால் கிரிக்கெட் போட்டி ரத்து

image

கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பாக இன்று நடக்கவிருந்த 14 வயதுக்குட்பட்டோருக்கான பயிற்சி ஆட்டங்கள் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதிகாலை பெய்த மழையினால் கந்திகுப்பம் கிங்ஸ்லி பள்ளியில் அமைந்துள்ள மாவட்ட சங்க கிரிக்கெட் மைதானம் முழுவதும் விளையாட முடியாத அளவிற்கு
தண்ணீர் தேங்கியதால் ஆட்டங்களை ரத்து செய்வதாக கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

News May 8, 2024

கிருஷ்ணகிரி: உயிரை பறித்த மழை… சோகம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளி கிராமத்தில் நேற்றிரவு பெய்த கனமழையால் இன்று காலை 8 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மீது மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் இப்பகுதியே சோகமயமானது.

News May 8, 2024

நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-25ம் கல்வியாண்டிற்கான பட்டயப் படிப்பிற்கு நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கான பதிவு நடைபெற்றுவருகிறது. +2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் https://www.tnpoly.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அத்துடன் கல்லூரிக்கு நேரில் வந்தும் விண்ணப்பிக்க வரும் 20ம் தேதி கடைசி நாளாகும். இவ்வாய்ப்பினை மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

News May 8, 2024

கிருஷ்ணகிரி: ‘கல்லூரி கனவு 2024’ தொடக்கம்

image

12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு 12ம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். அதன்படி, கிருஷ்ணகிரியில் மே 10ம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News May 8, 2024

10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி கிருஷ்ணகிரி உட்பட 12 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 7, 2024

கெலமங்கலத்தில் பட்டாளம்மன் கோவில் திருவிழா

image

கெலமங்கலத்தில் பட்டாளம்மன் கோவில் தேர்திருவிழா மே 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு பட்டாளம்மனை வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. அதற்காக சத்தியம்மா உருவ பொம்மையை 5 இடங்களில் வைத்து வழிப்பட்டனர். மேலும், வீட்டில் சமைத்த தயிர் சாதத்தை கொண்டு வந்து பக்தர்கள் படைத்தனர். அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு கிடா வெட்டி பூஜை செய்தனர்.

News May 7, 2024

கனமழை காரணமாக போக்குவரத்து பாதிப்பு

image

ஊத்தங்கரை பகுதியில்
கடுமையான கத்திரி வெயிலுக்கு மத்தியில் ஊத்தங்கரை, சாமல்பட்டி கல்லாவி, காரப்பட்டு, சிங்காரப்பேட்டை, பெரிய தள்ளப்பாடி,
அனுமன் தீர்த்தம் போன்ற பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர்.