India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஓசூர் அருகே கர்நாடக எல்லைப் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தானியர் உட்பட 4 பேர் இன்று குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் போலி ஆவணங்களுடன் ரஷித் அலி சித்திக் என்ற பாகிஸ்தானியர் வங்கதேசத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கடந்த 6ஆண்டுகளாக அப்பகுதியில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை மாவட்டம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இதில் அந்தந்த கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள், மகளிர் மற்றும் ஆடவர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து கிராம மக்களும் கலந்துகொண்டு குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட தேவைகளுக்கு தீர்வு காண வேண்டும் என ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
காந்தி ஜெயந்தி அரசு விடுமுறையை முன்னிட்டு, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார். மதுபானக் கடைகள், அனைத்து மதுக்கூடங்கள் அனைத்தும் இன்று இரவு 10 மணி முதல் அக்.3ஆம் தேதி காலை 12 மணி வரையும் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் சட்ட விரோதமான இதர வழிகளில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பதவிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த மகேஸ்வரிக்கு இணை இயக்குனர் (பணியாளர்) அரசு தேர்வுகள் இயக்கம் ஆக பதவி உயர்வு பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் செல்போன் உற்பத்தி ஆலை ரூ.3,699 கோடியில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. தற்போது 1.49லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள ஆலை, மேலும் 5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐ-போன்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும், இதன் மூலம் புதிதாக 80,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இன்று (30.09.2024) பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள திம்ஜே பள்ளியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு தொழிற்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து குறித்து அரசு தடயவியல் துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்க உள்ளனர். தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டு உள்ளதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்கள் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் எனவும் மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், தாட்கோ துறை சார்பாக 8 பயனாளிகளுக்கு ரூ.76 ஆயிரத்து 500 மதிப்பில் தற்காலிக ஊனம், கல்வி மற்றும் திருமண உதவித்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இன்று (30.09.2024) வழங்கினார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், தாட்கோ மாவட்ட பொது மேலாளர் வேல்முருகன் ஆகியோர் உள்ளனர்.
ஓசூர் மாநகராட்சியுடன், அச்செட்டிப்பள்ளி, பேகேப்பள்ளி, சென்னசந்திரம், கொத்தகொண்டப்பள்ளி, நல்லூர், ஒன்னல்வாடி, தொரப்பள்ளி, பேரண்டப்பள்ளி, பூனப்பள்ளி ஆகிய 9 ஊராட்சிகளை இணைக்க அரசு முடிவு செய்து நேற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநகராட்சியில் கடந்த 2011 மக்கள் தொகை கணக்கின்படி, 2,45,354 பேர் வசித்து வருகின்றனர். இந்த 9 ஊராட்சிகளையும் இணைத்ததால் மக்கள் தொகை எண்ணிக்கை 2,98,164 ஆக உயரும்.
Sorry, no posts matched your criteria.