India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டம் அலசட்டி கிராமத்தில் நேற்று ஊருக்கு அருகிலேயே உள்ள விளைநிலத்திற்கு சென்று நேற்றிரவு வீடு திரும்பிய திம்மராயப்பா (42) என்பவரை ஒற்றைக் காட்டுயானை தூக்கி வீசியது. படுகாயமடைந்த திம்மராயப்பா தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காட்டுயானை தாக்கி கடந்த 15 நாட்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக 3 மாதங்களுக்கு பிறகு கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நீர்வரத்து தொடங்கியது. அணைக்கு நீர்வரத்து 1126 கனஅடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் மற்றும் தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அப்பிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (27) என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக மனவேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை அப்பிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சடலத்தை மீட்டு ஊத்தங்கரை போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் சடலம் பெற்றோர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.
தளி சட்டமன்றத் தொகுதி தேன்கனிக்கோட்டை பகுதியில் யானைகள் தாக்கி தொடர்ந்து மனித உயிர்கள் பலி மற்றும் பல ஏக்கர் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டி, வனத்துறையினரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை (மே 15) தளி M.L.A இராமச்சந்திரன் தலைமையில் தேன்கனிக்கோட்டை வன அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற உள்ளது.
ஊத்தங்கரை அறநிலையத்துறை ஆய்வாளராக பால்வண்ணன் (57) கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவர் கட்டுப்பாட்டில் இருந்த 43 கோயில்களில் உண்டியல் திறப்பது, கோவில் வைப்பு நிதி மற்றும் புனரமைப்பு நிதி ஆகியவற்றில் முறைகேடு செய்து சுமார் 86 லட்சம் அளவிற்கு மோசடி செய்ததாக உதவி ஆணையர் ஜோதிலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் 30 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 82.56% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 74.03 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 89.42 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் கலைப் பண்பாட்டு துறையின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு இசைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியில் பாரம்பரிய கலைகளான குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம் ஆகிய கலைகள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண் பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சி காலம் 3 ஆண்டுகள் ஆகும். பயிற்சி கட்டணம் ஏதுமில்லை.
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவர்கள் 82.75% பேரும், மாணவியர் 92.37% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 87.82% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாநில அளவில் 31வது இடம். மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் , நேற்று சமூக பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுத்தல் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தலைமையில் நடைபெற்றது.
கெலமங்கலத்திலுள்ள கிராம தேவதை பட்டாளம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 7-ம் தேதி அம்மனை எல்லையை விட்டு வெளியேற்றும் நிகழ்ச்சியுடன் ஆரம்பம் ஆனது. அதனை தொடர்ந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மே 14-ம் தேதி தான வீர சூர கர்ணன் நாடகமும், மே 15-ம் தேதி பாட்டுக்கச்சேரியுடன் அலங்கரித்த பல்லக்கில் பட்டாளம்மன் திரு வீதி உலா நடக்கிறது.
Sorry, no posts matched your criteria.