Krishnagiri

News December 17, 2024

திப்பம்பட்டியில் கூட்டுறவு கடன் சங்க தொடக்க விழா

image

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், போச்சம்பள்ளி ஒன்றியம், B.திப்பம்பட்டி K.K.116 VPB தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அலுவலகம் திறப்புவிழா நேற்று நடந்தது. இதில் பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மதியழகன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

News December 16, 2024

போச்சம்பள்ளி வெடி விபத்தில் சிக்கிய உரிமையாளர் உயிரிழப்பு

image

போச்சம்பள்ளி அடுத்த வடமலம்பட்டி பகுதியில் இன்று மாலை வெல்டிங் கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயம் அடைந்த உரிமையாளர் ஜெய்சங்கர் (42) மற்றும் பிரகாஷ் (37) ஆகிய இருவரும் மீட்கப்பட்டு போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ஜெய்சங்கர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். படுகாயம் அடைந்த பிரகாஷ் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அனுப்பப்பட்டுள்ளார்.

News December 16, 2024

பர்கூர் அருகே கோமாரி நோய் 6வது சுற்று தடுப்பூசி முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒப்பம் ஊராட்சி மருதேப்பள்ளி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டம் கோமாரி நோய் 6-வது சுற்று தடுப்பூசி முகாமினை பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தே.மதியழகன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர். உடன் கால்நடை இணை இயக்குனர்,அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

News December 16, 2024

 மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம்

image

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் நாளை (டிச 17) கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காலை 9.30 மணி முதல் மதியம் 1 வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 15, 2024

சாலை விபத்தில் 2 இளைஞர்கள் பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த தொகரப்பள்ளி வனப்பகுதியில் சாலை வளைவில் திரும்பும் போது இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். போலீஸ் விசாரணையில் பெருகோபனபள்ளி சேர்ந்த தமிழரசு மற்றும் அவரது நண்பர் கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என தகவல் வந்துள்ளது. மத்தூர் போலீசார் சடலத்தை மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

News December 15, 2024

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 21 ஆயிரத்து 99 கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் 6-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாம் (கோமாரி நோய் தடுப்பூசி) நாளை திங்கட்கிழமை முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஜனவரி 20 ஆம் தேதி வரை குறிப்பிட்ட தேதிகளில் நடைபெற உள்ளது என ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்….

News December 15, 2024

கிருஷ்ணகிரியில் லோக் அதாலத் மூலம் 1,804 வழக்குகளுக்கு தீர்வு

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று(டிச 14) நடந்தது. இதில் விபத்தில் பலியான பர்கூர் துணை பி.டி.ஓ.,க்கள் முகிலன், பாரதி ஆகியோருக்கு தலா 98 மற்றும் 96 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை உள்பட மாவட்டம் முழுவதும் எடுத்து கொள்ளப்பட்ட, 2,994 வழக்குகளில் 1,804 வழக்குகளுக்கு 17 கோடியே 97 லட்சத்து 77 ஆயிரத்து 466 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.

News December 14, 2024

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டி தர நடவடிக்கை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை சரி செய்ய நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆவணங்கள், வீடுமனை பட்டா வழங்கி, மாற்று இடங்களில் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 255 மருத்துவ முகாமில் 17,000 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு, கால்நடைகளுக்கும் 13 முகாமில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

News December 14, 2024

கோமாரி நோய் தடுப்பூசி 6வது சுற்று முகாம் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கால்நடை பராமரிப்புத் துறை, தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டம் சார்பாக கோமாரி நோய் தடுப்பூசி 6 வது சுற்று முகாம் நடைபெறுவதையொட்டி மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எம்.சரயு தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் இளங்கோவன் மற்றும் கால்நடை மருத்துவர்கள் பலர் உள்ளனர்.

News December 13, 2024

கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை தகவல்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற அரசு பொது தேர்வுகளில் 10,11 மற்றும் 12 வகுப்பு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள் தனித் தேர்வுக்காக விண்ணப்பிக்க டிசம்பர் 17ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்களே கால அவகாசம் உள்ள நிலையில் உடனடியாக விண்ணப்பிக்க கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!