Krishnagiri

News October 27, 2024

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் 

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 27, 2024

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து; ஓட்டுநர் உட்பட 2 பேர் காயம்

image

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அஞ்செட்டி கொண்டை ஊசி வளைவில் சென்ற சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இன்று விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் உடன் சென்ற ஒருவர் என இரண்டு பேர் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சென்ற அஞ்செட்டி போலீசார் வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்து விசாரித்து வருகின்றனர்.

News October 27, 2024

கிருஷ்ணகிரியில் புகையிலை விற்ற பத்து பேர் கைது

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்த புகையிலை பொருட்கள் விற்றதற்காக அந்தந்த பகுதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், மகாராஜகடை, ஓசூர், பேரிகை, சூளகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற சுமார்  10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 27, 2024

கிருஷ்ணகிரியில் ரேஷன் கடைகள் வழக்கம்போல் இயங்கும்

image

தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை 27-10-2024, தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். எனவே, கிருஷ்ணகிரியில் மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News October 27, 2024

சாலையை கடந்து சென்ற நான்கு காட்டு யானைகளால் பரபரப்பு

image

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தல்சூர் கிராமத்தில் ஏரி அருகே 4 காட்டு யானைகள் சாலையை கடந்து சென்றன. சாதாரணமாக இந்த காட்டு யானைகள் சாலையில் சென்றதால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த காட்டு யானைகள் கிராமப் பகுதிகளில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள ராகி, நெல், தக்காளி உள்ளிட்ட பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

News October 27, 2024

கெலவரபள்ளி அணையில் குறைந்த ரசாயன நுரை

image

ரசாயன நுரையால் மூடப்பட்டிருந்த ஓசூர் கெலவரப்பள்ளி அணை பகுதியில் நுரை குறைந்து போக்குவரத்து சீரானது. அணையில் இருந்து 4,600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் அதிகப்படியான ரசாயன நுரை 30 அடி உயரத்துக்கு சாலையை ஆக்கிரமித்தது. இதனால் நந்திமங்கலம், சேவி செட்டிப்பள்ளி, கொவலதாசபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 10 கிலோமீட்டர் சுற்றி வரவேண்டிய நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது. 

News October 26, 2024

ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் நிலவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 26, 2024

தமிழக வெற்றி கழகம் மாநாடு தொண்டர் அணியினர் உற்சாகம்

image

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொண்டர் அணி சார்பாக மட்டும் சுமார் 45 பேருந்துகளில் 2000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொண்டர் அணி சார்பிலும், கட்சி நிர்வாகிகள் சார்பிலும் பல்வேறு அளவுகளில் பேனர்கள் வைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

News October 26, 2024

மாநில விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள், அறிவு சார் குறைபாடு உள்ளவர்கள், பேச்சு திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் /நிறுவனங்கள் மாநில விருதுகளுக்கு 28.10.2024 -க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இன்று தனது செய்தி குறித்து தெரிவித்துள்ளார்.

News October 26, 2024

கோழி தீவன மூட்டை சரிந்து விழுந்து இரு குழந்தைகள் பலி

image

தேன்கனிக்கோட்டையை அடுத்த கோபசந்திரத்தை சோ்ந்த ரவிக்குமாரின் கோழி பண்ணையில் பீகாரை சோ்ந்த முகமது ஜகவுல்லா தனது குடும்பத்துடன் வேலை செய்து வருகிறாா். இவா்களது குழந்தைகள் சாா்பானு(4),ஆயுத் காதூன் (3) ஆகிய இருவரும் நேற்று கோழி பண்ணையில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த மூட்டைகள் சரிந்து விழுந்ததில் 2குழந்தைகளும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!