India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்துள்ள படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான விண்ணப்பத்தை www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தை நவ 30ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கௌரிசங்கர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் .கே.எம்.சரயு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பொதுமக்கள் தங்களின் பல்வேறு குறைகளை முன்வைத்தனர். வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகைகள், சாலை வசதி போன்ற முக்கிய கோரிக்கைகள் மனுக்களில் அதிகமாக இருந்தன. மாவட்ட ஆட்சியர், தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளக்குட்டை பகுதியில் உறவினர் வீட்டிற்கு சென்ற நபர் சாலையை கடக்கும் போது செங்கம் நோக்கி சென்ற தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். உடலை கைப்பற்றிய சிங்காரப்பேட்டை போலீசார் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் இடைப்பையூரைச் சோ்ந்தவர் ராஜா (50). இவரது மகன் மகேந்திரன் (15). இவர் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இருவரும் காவேரிப்பட்டினத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது பையூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து காவேரிப்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 14 ஆயிரத்து 81 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் 1 லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்து 2021-ம் ஆண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். ரூ.3,025 கோடி மதிப்பில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டது.
தென்பெண்னை நீரை கரையோர விவசாய மக்கள் மட்டுமே ஏற்றம் முலம் எடுத்து விவசாயம் செய்தனர். மற்ற பகுதி மக்கள் நீரின்றி வறட்சியால் தவித்தனர். அதை மாற்ற அப்போதைய காவேரிப்பட்டணம் எம்.எல்.ஏ சு. நாகராஜ மணியகாரர் ஆற்றின் குறுக்கே அணை கட்ட அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதன்படி, முதல்வர் காமராஜர், ராஜாஜியின் ஆலோசனைப்படி அணை கட்ட சம்மத்தித்தார். அணை கட்டும் பணி 1955ல் தொடங்கி 1957 நவ 10 ஆம் தேதி திறக்கப்பட்டது.
பாகலூரில் ரூ.1 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சரயு, ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினர் பிரகாஷ், மாநகராட்சி மேயர் சத்யா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் எல்லோரா மணி, முன்னாள் பாகலூர் ஊராட்சி மன்றத் தலைவர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை சாலையில் வாக்கில் உள்ளே அவுட் பகுதிக்கு செல்லும் இடத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக சிலர் வாடகைக்கு பயன்படும் வகையில் வீடுகளை கட்டி வருவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு கட்டப்பட்டிருந்த 15 வீடுகளை வருவாய்த்துறையினர் ஜேசிபி வாகனங்கள் உதவியுடன் இடித்து அகற்றினர். அப்போது ஓசூர் போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை 9.11.2024 காலை பத்து மணி முதல் ஒரு மணி வரை அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்களிடம் தங்களது ரேஷன் அட்டையில் பெயர் நீக்கல், சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டான கோரிக்கைகள் சம்பந்தமாக மனு அளித்து தங்களது கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நவ 9ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. முகாமில் 8 ஆம் வகுப்பு மற்றும் அதற்குமேல் கல்வி பயின்ற மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, தனித்துவம் மிக்க அடையாள அட்டை, ஆதாா் அட்டை, கல்விச் சான்றுகள், புகைப்படம், சுய விவரம் ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.