Krishnagiri

News November 15, 2024

நாளை வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் அனைத்து விதமான திருத்தங்கள் செய்ய அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இச்சிறப்பு முகாம்கள் நாளை (நவ.16), நாளை மறுநாள் (நவ.17) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. மக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News November 15, 2024

கிருஷ்ணகிரியில் எதிர்க்கட்சி தலைவர் திட்டவட்டமாக அறிவிப்பு

image

பர்கூர் அருகே உள்ள எமக்கல் நத்தம் கிராமத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.அக்கூட்டத்தில் பேசிய அவர் “வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜவுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம். கூட்டணிக் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுப்பது எல்லாம் மற்ற கட்சிகளுக்குத்தான் அது பாஜகவுக்குப் பொருந்தாது” என தெரிவித்தார்.

News November 14, 2024

உலக நீரிழிவு நாள் விழிப்புணர்வு ஊர்வலம்

image

ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி சார்பில் உலக நீரிழிவு நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் கிரிஷ் ஓங்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் மருத்துவக்கல்லூரி துணை கண்காணிப்பாளர் தீபக் ஆனந்த், இருப்பிட மருத்துவர் பார்வதி, பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

News November 14, 2024

குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு 7சதவீத வட்டியில் ரூ.20 லட்சம் வரை நடைமுறை மூலதன கடன்கள், இயந்திரங்கள் கொள்முதல் செய்தல், நிறுவனத்தின் கட்டடங்கள் கட்டுதல் போன்றவற்றுக்கு கலைஞா் கடனுதவி திட்டத்தின் கீழ் அசையா சொத்து அடமானத்தின் பெயரில் கடனுதவி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04343 235567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 14, 2024

கிருஷ்ணகிரியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (நவ 15) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், விந்தியா இன்போ மீடியா, பிரபால் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 8-ம் வகுப்பு முதல் பட்டதாரி வரை உள்ள அனைவரும் இந்த முகாமில் பங்கேற்கலாம் என அறிவித்துள்ளனர்

News November 14, 2024

பாலினம் கண்டறிவோர் குறித்து தகவல் அளிக்க வேண்டுகோள்

image

ஊத்தங்கரையை அடுத்த மாரம்பட்டி ஊராட்சி, கூனம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சரயு தலைமையில் நேற்று நடந்தது. அப்போது கருவின் பாலினம் கண்டறிய தடை விதிக்கப்பட்டு அதை அரசு தீவிரமாக கடைப்பிடித்து வருகிறது. எனவே கருவின் பாலினம் கண்டறியும் முயற்சியில், மருத்துவா்கள் உள்பட யாா் செயல்பட்டாலும் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

News November 13, 2024

தமிழ்நாடு சாலை ஆய்வாளர்கள் சங்க கூட்டம்

image

ராயக்கோட்டையில் தமிழ்நாடு சாலை ஆய்வாளர்கள் சங்க கூட்டம் மாவட்ட செயலாளர் வினோத் தலைமையில் நடந்தது. மாநில செயலாளர் தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுக்குழு வரும் டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அனைத்து கோட்ட, உட்கோட்ட நிர்வாகிகள், அனைத்து உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

News November 13, 2024

கிருஷ்ணகிரி அருகே வெட்டி வீசப்பட்ட பெண்ணின் உடல்

image

திருவண்ணாமலையை சேர்ந்த கோபி(34), மனைவி சரண்யா(29) என்பவரை குடும்ப தகராறு காரணமாக கொன்று கிருஷ்ணகிரி அருகே வீசிச்சென்றது தொடர்பாக திருவண்ணாமலை போலீசார் குருபரப்பள்ளி போலீசார் உதவியுடன் மேலுமலை வனப்பகுதியில் சரண்யாவின் உடலை தேடினர். அங்கு அவரது உடல் பாகங்களை 5 நெகிழிப் பைகளில் அழுகிய நிலையில் கைப்பற்றிய போலீசார் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

News November 12, 2024

எடப்பாடி வருகை குறித்து ஆலோசனை கூட்டம்

image

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், நாளை மறுநாள் 14-ம் தேதி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு வருகை தரும் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சப்பாணிப்பட்டியில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News November 12, 2024

சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் திட்டம்

image

கலைஞர் கடன்திட்டம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ், தமிழ்நாடு தொழிலாளர் கூட்டுறவு வங்கி (தாய்கோவங்கி) கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு 7% வட்டியில் ரூ.20 லட்சம் வரையிலான கடன் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பிற நிறுவனங்களிலுள்ள இருந்து பெற்ற அதிக வட்டி கடன்களை மாற்றிக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தாய்கோ வங்கி கிளைகளை அணுகலாம்.

error: Content is protected !!