India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தேன்கனிக்கோட்டை சாலையில் பி.செட்டிப்பள்ளி பகுதியில் டிப்பர் லாரி மோதி காரில் சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தை உட்பட இருவர் பலியான நிலையில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை வெட்டிய குற்றத்தில் ஆனந்தன், சத்யாவதி தம்பதி சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனந்தன் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவியையும் கைது செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை மத நல்லிணக்க வாரம் மற்றும் நவம்பர் 25-ஆம் தேதி கொடி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், சாதி, இன ஆதரவற்றவர்களாக இருக்கும் குழந்தைகளின் கல்வி மற்றும் மறுவாழ்விற்காக தன்னார்வலர்களிடம் இருந்து மத நல்லிணக்க கொடி நாள் நன்கொடை வசூல் செய்யப்படுகிறது. இதையொட்டி கொடி நாள் நன்கொடை வசூலை கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்.
ஒரப்பம் ஊராட்சி, ஜெய் ஸ்ரீ கல்யாண மண்டபத்தில், நடைபெற்ற 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்கள் மற்றும் பரிசுத்தொகை பெற்ற வீரர், வீராங்கனைகளை நேற்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அர.சக்கரபாணி, மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு, பாராட்டுக்களை தெரிவித்தனர்.
போச்சம்பள்ளி வட்டத்தில் நாளை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் பொருட்டு அனைத்து பகுதிகளிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை உயர் அலுவலர்களும் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு மக்களிடம் நேரடியாக சென்று கள ஆய்வு நடைபெற உள்ளது. இந்த கள ஆய்வு நாளை காலை 9 மணி முதல் அடுத்த நாள் காலை 9 மணி வரை நடைபெற உள்ளது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வரும் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் கலெக்டர் சரயு தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சரயு கேட்டுக் கொண்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியிலிருந்து பேரிகை செல்லும் சாலையில் புலியரசி கிராமத்தை அடுத்துள்ள செட்டிப்பள்ளி காப்புகாடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் ஆங்காங்கே கேமராவை பொருத்தி வருகின்றனர். இதன்மூலம் அப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என கண்டறியப்பட்டு அவற்றை பிடிக்கும் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இன்று (18.11.2024) பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள் உள்ளிட்ட பலர் உள்ளனர். இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர்.
கிருஷ்ணகிரி லண்டன் பேட்டை பகுதியில் அமைந்துள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இன்று(நவ 18) காலை10:15 மணி ஆகியும் ஊழியர்கள் பணிக்கு வராததால் புதிய சிம் வாங்க வரும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதிகாரிகள் எப்போது வருவார்கள் என செக்யூரிட்டி இடம் கேட்ட போது அவர்கள் வரும் நேரத்தில் தான் வருவார்கள் என்று அலட்சியமாக பதில் கூறியுள்ளார். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஒசூர் மாநகர போலீசார் பேருந்து நிலையத்தில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இருவரிடம் போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் வைத்திருந்த பைகளில் 21கிலோ புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம், ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த பலவேசம் (42), அழகேஷ் (44) இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.